வேலூர்.ஆக.30,
மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் இளைஞர் அணி செயலாளர் அமீன், துணைச் செயலாளர் சாதிக் முன்னிலையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் அன்சர், ஹயாத், அலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
30-08-2020