ஆகஸ்ட்.31., சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த சகோதரா் சிகிச்சை பலன்றி உயிரிழந்தாா். இறந்தவரின் உடலை மஜக மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளா் அப்துல்ரஹ்மான், அவர்கள் தலைமையில் ஆசிக், அலி, அமீன், ஆகியோா் உடலை பெற்று அவர்களின் மத வழக்கப்படி இறுதி மரியாதை செய்தனர். மஜக வினரின் இந்த மனிதநேய சேவைக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி கூறினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 30.08.2020
Month:
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்_முகர்ஜி மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். காங்கிரஸ் பேரியக்கத்தின் வழியாக நாட்டுக்கு அறிமுகமான அவர், இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், வங்க மக்களின் பெருமைக்குரிய ஆளுமைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். அவரின் மறைவுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி, 31.08.2020
தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கடந்த ஜீன் 4 , 2020 அன்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கொரோனா தொற்றின் காரணமாக தேர்வு கட்டணம் செலுத்துவது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . இதனிடையே கடந்த ஆகஸ்ட் 26 அன்று முதல்வர் அவர்கள் "அரியர் தேர்வு கட்டணம்" செலுத்தியவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் அந்த வாய்ப்பை இழந்துள்ளது கவனிக்கத்தக்கது. கொரோனா பேரிடர் காரணமாக ஏராளமான மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்துள்ளனர். இதனால் பல கல்லூரிகள் தங்களை வழி நடத்தும் பல்கலை க்கழகங்களில் கட்டணம் செலுத்தவில்லை. இவ்விஷயத்தில் போக்குவரத்து இன்மை, வாழ்வாதார இழப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு தமிழக அரசு இப்பிரச்சினையை அணுக வேண்டும். எனவே தேர்வு கட்டணம் செலுத்தாத அனைத்து பொறியியல், கலை, பாலி டெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் இதே போன்ற வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 31.08. 2020
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.! – தலைமை செயற்குழு உறுப்பினர்
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, T. A.முஹமது இக்பால் த/பெ; T. K.அப்துல் காதர் 28. வெள்ளை கலிபா சாகிப் தெரு, மேலப்பாளையம், நெல்லை அலைபேசி; 9092929262 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மு.தமிமுன்அன்சாரி MLA., #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 31-08-2020