மஜக மருத்துவ சேவை அணி நெல்லை மாவட்டம் சார்பாக கபசுரக்குடிநீர் விநியோகம்.!


நெல்லை.ஆக.30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை பழையபேட்டை இரானி அண்ணா கலைகல்லூரி அருகில் உள்ள காந்திநகர் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் புகாரி தலைமை தாங்க, பேட்டை நகர துணை செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப்பொருளாளர் பேட்டை மூஸா, காந்திநகர் பள்ளி ஜமாத் தலைவர் முனிர் அவர்கள், மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் நாகூர்மீரான், மேலப்பாளையம் பகுதி செயலாளர் தமீம் அன்சாரி, நெல்லை பகுதி துணை செயலாளர் அலாவுதீன், மேலப்பாளையம் அப்துல், ஜெய்லானி, முஜாகித் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேட்டை நகர செயலாளர் இரா.முத்துக்குமார், பொருளாளர் அசன்கனி, MJTS நகர செயலாளர்கள் A1மைதீன், ஹபிபுல்லாஹ், காந்திநகர் ரவி, பேட்டை முருகேசன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கபசுரக்குடிநீரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் பருகி பயணடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

தகவல்;
#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
30-08-2020