மஜக வேலூர் மாவட்டத்தில் கபசுரக்குடிநீர் விநியோகம்!!



வேலூர்.ஆக.29.,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வேலூர் மாநகரின் பழைய மீன் மார்க்கெட் அருகில் வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் படெல் ஷமீல் அவர்களின் தலைமையில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமது யாசின் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சையத் உசேன், அமீன், சாதிக், அன்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
29-08-2020