ஊரடங்கால் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிய கோவை MJTS தொழிற்சங்கத்தினர்!!

கோவை:ஆக.30.,

கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

அதைத்தொடர்ந்து சாலையோரத்தில் உணவு இன்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பேருந்து நிலையம், ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அபு, அவர்கள் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், அபு, ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

இப்பணியில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் உசைன், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர்கள் ஜாகீர், அப்துல் சமது, அன்சர், சிங்கநல்லூர் கிளைச் செயலாளர் ஹைதர், மற்றும் காஜா உசேன், பயாஸ், ரியாஸ் ஆகியோர் ஈடுபட்டனர்.

தகவல்.,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்.
30.08.2020