சென்னை.ஏப்ரல்.21., நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், எழும்பூர் பகுதி புரசைவாக்கம் 104வது வட்டம் சார்பாக புரசைவாக்கத்தில் பொன்னப்பா தெரு, தானா தெரு, சுந்தரம் தெரு, ஆகிய இடங்களில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் T. ரவூப் ரஹீம், துறைமுகம் காஜா, பகுதி துணைச் செயலாளர் அப்துல் கலாம், புரசைவாக்கம் 104 வது வட்டச் செயலாளர் முஹம்மது ஷரிப், துணை செயலாளர் சஃபீ, 77 வது வட்டச் செயலாளர் ஆதம் இம்தியாஸ், மற்றும் பிரோஸ், இஸ்மாயில், சையது அமீன், பாரூக், முஸ்தபா, சாஹீன்ஷ சாதிக் உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_கிழக்கு 21-04-2020
Month:
கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய மஜகவினர் : மருத்துவமனை முதல்வர் நன்றி!!
கோவை:ஏப்.21., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு மருத்துவர்களுக்கு தேவையான சாணிடைசர்கள், முகக்கவசங்கள், கிருமி நாசினி பவடர்கள், உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனை முதல்வர் திருமதி, நிர்மலா, அவர்களிடம் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். அதை தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அவர்கள் இங்கு வருபவர்கள் எல்லாம் நோயாளிக்கு தேவையான பொருட்களை மட்டுமே வழங்குகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும்தான் எங்களை போன்ற மருத்துவர்களுக்கு அவசியமான பொருட்களை வழங்கியிருக்கிறீர்கள் இது எங்களுக்கு மிகவும் அவசியமானது என கூறி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக் கடிதம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் சுவனம் அபு, பைசல், பரக்கத்அலி, மற்றும் சிங்கை கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 21.04.2020
ஆனந்த் டெல்டும்ப்டேவை விடுதலை செய்யவேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது. பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு (NIA) அமைப்பால் கடந்த 14.04.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். https://m.facebook.com/story.php?story_fbid=2409167445849683&id=700424783390633 அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்ட நாடறிந்த அறிவுஜீவிகளும், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களும்,மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் களமிறங்கி போர் குரல் எழுப்பி வருகின்றனர். வெறுப்பு அரசியலில் வழியே பிரிவினைவாத நடவடிக்கைகளை வளர்த்து வரும் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதும், தேசத்தின் முகவரிகளாக இருக்கும் அறிவுஜீவிகள் ஒடுக்கப்படுவதும் வேதனையளிக்கிறது. தங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுபவர்களை அடக்கு முறை சட்டங்கள் வழியே ஒடுக்க நினைப்பது ஃபாஸிசத்தின் கோர முகமாகும். கொரணா பரபரப்பில் நாடே மூழ்கியிருக்கும் சமயம் பார்த்து அவரை கைது செய்திருப்பது ஒரு வகை அரச தந்திரப் போக்காகும். அறிவுஜீவிகளை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகார அரசுகள் வெற்றிப் பெற்றதில்லை என்பதை வரலாற்றில் படிக்கிறோம். அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, அறிவுத் தளத்தில் அவருக்கு எதிராக செயலாற்றுவதே சிறந்த ஆளுமைப்
வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த கொரோனா நிவாராண சேவைகுழு!
வேலூர்.ஏப்ரல்.20., கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, RN பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் பொது மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இருந்து தொண்டுழியர்களாக பணியாற்றும் நோக்கில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து கொரோணா நிவாராண சேவைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு உறுப்பினர்கள் இன்று தமது கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஷண்முக சுந்தரம் IAS., அவர்களை சந்தித்தனர், கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டவர் உடனடியாக கோரிக்கைகளை பரிசிலிப்பதாகவும், இக்குழு பணியாற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார். இச் சந்திப்பில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அப்சர் சையத், மஜக மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் அமீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் (சிறுபான்மை பிரிவு) வாஹித் பாஷா, தமுமுக மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், வெல்பேஃர் கட்சி மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா, இஸ்லாமிய ஜனநாயக பேரவை (விசிக) மாவட்ட அமைப்பாளர் சையது
சுங்கச்சாவடிகள் இயங்க மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வழக்கம் போல் செயல்பட்டு கட்டண வசூல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும். கொரணா நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பும், பீதியும் குறையாத நிலையில் மக்கள் மிகப் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகள் செயல்படும் என அறிவித்திருப்பது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும். https://m.facebook.com/story.php?story_fbid=2406932309406530&id=700424783390633 இதன் மூலம் அவசரப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவது ஒரு புறமெனில், சரக்குப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடும். அந்த வகையில் இது மக்களின் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதலாகும். மத்திய அரசு இதுவரை மக்களுக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யாத நிலையில், அவர்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே பெரிய உதவியாகும். இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இப்போதைய நிலையில் அவற்றை செயல்பட வைப்பது மக்களிடையே மேலும் கடும் அதிருப்தியைத் தான் உருவாக்கும். எனவே, மத்திய அரசு இம்முடிவை திரும்ப