வேலூர்.ஏப்ரல்.20.,
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாநகரில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள கொணவட்டம், சைதாப்பேட்டை, கஸ்பா, RN பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் பொது மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையில் இருந்து தொண்டுழியர்களாக பணியாற்றும் நோக்கில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து கொரோணா நிவாராண சேவைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு உறுப்பினர்கள் இன்று தமது கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியர் திரு.ஷண்முக சுந்தரம் IAS., அவர்களை சந்தித்தனர், கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டவர் உடனடியாக கோரிக்கைகளை பரிசிலிப்பதாகவும், இக்குழு பணியாற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
இச் சந்திப்பில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அப்சர் சையத், மஜக மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் அமீன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் (சிறுபான்மை பிரிவு) வாஹித் பாஷா, தமுமுக மாவட்ட பொருளாளர் ஷாஜஹான்,
வெல்பேஃர் கட்சி மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா, இஸ்லாமிய ஜனநாயக பேரவை
(விசிக) மாவட்ட அமைப்பாளர் சையது இப்றாஹிம், INLP மாவட்ட தலைவர் ஷவுக்கத் அலி நண்பர்கள் டிரஸ்ட் பொருளாளர் முஹம்மத் ஜாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
20-04-2020