இந்தியாவின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர், எழுத்தாளர், அறிவுஜீவி என கொண்டாடப்படும் ஆனந்த் டெல்டும்ப்டே அவர்களை கைது செய்திருப்பதை மனித நேய ஜனநாயக கட்சி கண்டிக்கிறது.
பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையின் காரணமாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு (NIA) அமைப்பால் கடந்த 14.04.2020 அன்று கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
https://m.facebook.com/story.php?story_fbid=2409167445849683&id=700424783390633
அவருக்கு ஆதரவாக எழுத்தாளர் அருந்ததிராய் உள்ளிட்ட நாடறிந்த அறிவுஜீவிகளும், இந்தியாவின் முன்னணி அரசியல் தலைவர்களும்,மனித உரிமை மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களும் களமிறங்கி போர் குரல் எழுப்பி வருகின்றனர்.
வெறுப்பு அரசியலில் வழியே பிரிவினைவாத நடவடிக்கைகளை வளர்த்து வரும் தீய சக்திகள் பாதுகாக்கப்படுவதும், தேசத்தின் முகவரிகளாக இருக்கும் அறிவுஜீவிகள் ஒடுக்கப்படுவதும் வேதனையளிக்கிறது.
தங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுபவர்களை அடக்கு முறை சட்டங்கள் வழியே ஒடுக்க நினைப்பது ஃபாஸிசத்தின் கோர முகமாகும்.
கொரணா பரபரப்பில் நாடே மூழ்கியிருக்கும் சமயம் பார்த்து அவரை கைது செய்திருப்பது ஒரு வகை அரச தந்திரப் போக்காகும்.
அறிவுஜீவிகளை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகார அரசுகள் வெற்றிப் பெற்றதில்லை என்பதை வரலாற்றில் படிக்கிறோம்.
அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, அறிவுத் தளத்தில் அவருக்கு எதிராக செயலாற்றுவதே சிறந்த ஆளுமைப் பண்பாக இருக்கும்.
எனவே மத்திய அரசு அவர் மீதான பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரை விடுதலை செய்ய வழி வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
21.04.2020