கோவை:ஏப்.22., கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகமும் இணைந்துசுமார் 75 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், உக்கடம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் பாபு, முன்னாள் செயலாளர் அப்பாஸ், குத்தகைதாரர் ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 22.04.2020
Month:
இளையான்குடியில் மஜக சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்
சிவகங்கை.ஏப்ரல்.22., நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மஜக தலைமை ஒருகினைப்பாளர் மெளலா நாசர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை மஜக மாநில துணை செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் துவக்கி வைத்தார். மேலும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயினுலாபுதீன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், முஸ்தபா, சிராஜுதீன், முகம்மது மகாதீர, மற்றும் குவைத் மண்டல ஆலோசகர் சீனி முகம்மது உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 21-04-2020
தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்பநல உதவிகள்!
ஏப்.21, நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளைகளின் சார்பாக ஊரங்கு காரணமாக வாழ்வாதாரங்கள் முடங்கி கிடக்கும் பல்வேறு தரப்பு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக கிருமிநாசி தெளிப்பு மற்றும் சுகாதாரப்பணிகளில் சிறப்புர ஈடுப்பட்டு வரும் ஏனங்குடி ஆதலையூர் புத்தகரம் ஊராட்சியை சார்ந்த தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மஜக சார்பில் வழங்கப்பட்டது. இதில் மஜக திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன் தலைமையில் ஒன்றிய துணை நிர்வாகிகளும், ஒருங்கிணைந்த ஏனங்குடி கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக அச்சன் புதூர் பேரூர் கிளையின் சார்பாக இரண்டாவது கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
தென்காசி.ஏப்ரல்.21., இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பேரூர் கிளையின் சார்பாக கிளைச்செயலாளர் S.முகமது நாசர் தலைமையில் இரண்டாவது கட்டமாக 100 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மசாலா பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் P.கமால் தீன், M.சேக் முகமது உசேன், A.அப்துல்லாஹ், S.ரியாஸ் கான், S.முஹம்மது ஷபிக், A.முஹம்மது செய்யது உள்ளிட்ட மஜக-வினர் நிவாரண பொருட்களை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம். 21-04-2020
தூய்மை பணியாளர்களுக்கு மஜக சார்பில் குடும்ப நலஉதவிகள்