சிவகங்கை.ஏப்ரல்.22.,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மஜக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மஜக தலைமை ஒருகினைப்பாளர் மெளலா நாசர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை மஜக மாநில துணை செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் துவக்கி வைத்தார்.
மேலும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயினுலாபுதீன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், முஸ்தபா, சிராஜுதீன், முகம்மது மகாதீர, மற்றும் குவைத் மண்டல ஆலோசகர் சீனி முகம்மது உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
21-04-2020