கோவை மாவட்ட மஜக மற்றும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகம் சார்பில் 75 குடும்பங்களுக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!!

கோவை:ஏப்.22.,

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகமும் இணைந்துசுமார் 75 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், உக்கடம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் பாபு, முன்னாள் செயலாளர் அப்பாஸ், குத்தகைதாரர் ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கினர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
22.04.2020