டிச.25, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில்., குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து வட்டார ஜமாத்துல் உலமா சபை ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (டிச.24) சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபிதீன் கண்டன உரையாற்றினார். இதில், மஜக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், துணை செயலாளர்கள் ரபீக், ரியாஸ், அணி நிர்வாகிகள் நைனா, இக்பால், பாஷா, ஜாகிர் ஹுசைன், சதாம், முஸரப், பைசல், ஒன்றிய நிர்வாகிகள் காஜா மைதீன், ஹாஜா, சிதம்பரம் நகர நிர்வாகிகள் இப்ராம்ஷா, ஹபிபுல்லா, சதாம், தமீம் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்தெற்குமாவட்டம்
Month:
இது இரண்டாவது சுதந்திர போராட்டம்: முதமிமுன் அன்சாரி MLA சூளுரை!
டிச 25, கிருஷ்ணகிரியில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மாநாடு போல நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2175390609227369&id=700424783390633 மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் வலிமை பெற்று வருகின்றன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட அவர்களால் போராட்டங்களை அடக்க முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இணைய தள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை சுற்றிலும் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.தினமும் பல விமான சேவைகள் ரத்தாகின்றன. மக்களின் போராட்டங்களால் தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலை என்றால், நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சூழல் என்னவென யூகிக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் மீது நடைப்பெற்ற துப்பாக்கி சூடுகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். டெல்லியில் அராஜகம் செய்த போலிஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது. ஆயினும் போராட்டங்கள் பெருகியபடியே செல்கிறது. மத்திய அரசு திணறுகிறது. தமிழகம்
நாடு வளம் பெற இணைந்து பணியாற்றுவோம்..! முதமிமுன்அன்சாரி_MLA அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
#மஜகபொதுச்செயலாளர்.! உலகம் முழுக்க கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவாகும், நம் இந்திய திருநாட்டில் இப்பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்திய மண்ணில் ஆரம்ப கல்வியையும், உயர்கல்வியையும் வளர்த்தெடுத்தவர்கள் கிறித்தவ பெருமக்கள் என்பது மகிழ்ச்சிகுறிய செய்தியாகும். வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற குக்கிராமங்களில் கூட சேவை நிறுவனங்களை அமைத்து, மக்களுக்கு தொண்டாற்றி வரும் அவர்களின் பணிகளை எல்லோரும் பாராட்டுகின்றனர். தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கும், அன்றும், இன்றும் கிறித்தவ சேவை நிறுவனங்கள் ஆற்றி வரும் சேவைகள் எண்ணிலடங்காதது, இன்று நமது நாட்டில் பாசிச சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகளை மக்களிடம் திணித்து வரும் சூழலில், அவற்றை ஜனநாயக சக்திகளோடு இணைந்து கிறித்தவ மக்கள் எதிர்த்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரிய சேவையாகும். அந்த உறவுக்குரிய மனநிலையில்தான், புதிய குடியுரிமை திருத்த சட்டத்தில் (CAA) நேபாளம் மற்றும் பூடானில் வழிபாட்டுரிமை பறிக்கப்படும், கிறித்தவர்களுக்கும் அகதிகளுக்கான வாய்ப்புகளை தர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வாதாடி, போராடி வருகிறது என்பதையும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். நமது நாட்டின் ஜனநாயகத்தையும், வளங்களையும் பாதுகாக்க இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்துகளும் அண்ணன் தம்பிகளாக இணைந்து நின்று பணியாற்ற இந்நன்னாளில் உறுதி
இரத்ததுளிகளிலிருந்து போராட்டங்கள் உயிர்பெறும், தேன்கனிகோட்டையில் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!
டிச.24, இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் #CAA & #NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக, மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- இதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது. இது விலைவாசி உயர்வுக்கான போராட்டமல்ல. ரயில் கட்டண, பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல. இது வாழ்வுரிமைக்கான போராட்டம். இது குடியுரிமைக்கான போராட்டம். இது தலைவர்களோ, இயக்கங்களோ, கட்சிகளோ நடத்தும் போராட்டங்கள் அல்ல. மக்களே மக்களுக்காக நடத்தும் அறவழிப் போராட்டம்! இந்துக்களும், முஸ்லிம்களும், கிரித்தவர்களும், தலித்துகளும் இணைந்து இந்தியாவை காக்கும் அரசியல் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம். அதனால் தான் மக்கள் ஆயுதம் கொண்ட படை வீரர்களையே எதிர்த்து நிற்கிறார்கள். இதை எந்த கட்சிகளும் அரசியல் அறுவடையாக நினைத்து பயன்படுத்திட நினைத்திட கூடாது. அனுமதிக்கவும் கூடாது. ஏனெனில் உரிமைக்காக கூடும் கூட்டம் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தான் சட்டம். மக்கள்
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி ராபியாவுக்கு அவமரியாதை, ஜனாதிபதி பதக்கத்தை வழங்க வேண்டும் : முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி ராபியாவுக்கு அடையாள வெறுப்பை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் ஜனாதிபதி கையால் தங்கப்பதக்கம் பெற, முன்கூட்டியே அரங்கிற்கு வந்து அமர்ந்துள்ளார். நிகழ்ச்சிக்கு சில நிமிடங்கள் முன்பு, அவரை அதிகாரிகள் அரங்கிலிருந்து வெளியேற்றியது ஏன்? என்ற கேள்வியை அவரும் எழுப்பியுள்ளார். இப்போது எல்லோரும் எழுப்புகிறார்கள். இதற்கு அவரது பெயர் ஒரு காரணமா? அவர் அணிந்திருந்த ஹிஜாப் எனும் தலைத் துண்டு காரணமா? அல்லது இன, மத வெறுப்பு காரணமா? என்ற கேள்விகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் நேர்மையாக விளக்கமளிக்க வேண்டும். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட அடையாள நெருக்கடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பட்டத்தை மட்டும் பெற்றுக் கொண்டு, தங்கப் பதக்கத்தை திருப்பியளித்த ராபியாவின் சுயமரியாதையையும்,துணிச்சலையும் பாராட்டுகிறோம். சுதந்திரம், துணிச்சல், சமூக நீதி, ஆகியவற்றுடன் அவர் கல்வி அறிவை வளர்த்து கொண்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். மற்றவர்களுக்கும் இது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும். அதன் பிறகு, அவர் தன் பிரச்சனையோடு மட்டுமின்றி,நாட்டின் இன்றைய தீவிரப் பிரச்சனைகள் குறித்தும் ஊடகங்களிடம் கவலை தெரிவித்திருப்பது, அவரின் சமூக பொறுப்பையும், அக்கரையையும் வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இதுப் போன்ற பிரச்சனை, இனி யாருக்கும் வரக்கூடாது என்ற