இது இரண்டாவது சுதந்திர போராட்டம்: முதமிமுன் அன்சாரி MLA சூளுரை!

டிச 25,

கிருஷ்ணகிரியில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மாநாடு போல நடைப்பெற்றது.

இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

https://m.facebook.com/story.php?story_fbid=2175390609227369&id=700424783390633

மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் வலிமை பெற்று வருகின்றன.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட அவர்களால் போராட்டங்களை அடக்க முடியவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் இணைய தள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியை சுற்றிலும் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.தினமும் பல விமான சேவைகள் ரத்தாகின்றன. மக்களின் போராட்டங்களால் தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலை என்றால், நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சூழல் என்னவென யூகிக்கலாம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் மீது நடைப்பெற்ற துப்பாக்கி சூடுகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். டெல்லியில் அராஜகம் செய்த போலிஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது.

ஆயினும் போராட்டங்கள் பெருகியபடியே செல்கிறது. மத்திய அரசு திணறுகிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் அமைதி வழியில் நகர்கிறது .

மக்களின் இந்த கிளர்ச்சிகளை சிலர் வன்முறையாக சித்தரிக்க நினைக்கிறார்கள். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். அவர் ‘வன்முறை வருத்தம் அளிப்பதாக ‘ ட்விட் செய்துள்ளார்.

ஜீனைத் என்ற இளைஞருக்கு ஏற்பட்ட நிலை என்னவென ரஜினிக்கு தெரியுமா?

தன் ஏழைத் தாயிடம் ; பாத்திரம் கழுவி; வீட்டு வேலை பார்த்து சேமித்த பணத்தை பெற்றுக் கொண்டு ; ரயிலில் டெல்லிக்கு சென்று, ரமலான் பெருநாளை கொண்டாட, துணிமணிகளை வாங்க சென்றான் ஜுனைத் என்ற அந்த சிறுவன்.

ரமலான் புனித நோன்பிருந்து, பட்டினியோடு, துணிமணிகளை வாங்கிக் கொண்டு, அதை தன் ஏழைத்தாயிடம் காண்பிக்கும் மகிழ்ச்சியோடு ; ரயிலில் ஹரியானா திரும்பிய போது, அவனை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக ரயிலிலிருந்து இறக்கி, கதற, கதற அடித்தே கொன்றது காவி வன்முறை கும்பல்.

அதை ரஜினிகாந்த் அப்போது ஏன் கண்டிக்கவில்லை?

பாபர் மசூதியை பயங்கரவாதிகள் இடித்தார்களே..

1997 ல் ஒரிசா சட்டமன்றத்தை தாக்கினார்களே..
தொழுநோயாளிகளுக்கு சேவை செய்ய ஆஸ்திரேலியாவிலிருந்து ஓடோடி வந்து பணியாற்றிய பாதிரியார் கிரஹாம்ஸ் டெயின்சையும், அவரது இரு பிள்ளைகளையும் ஜீப்பில் வைத்து உயிரோடு தீ வைத்து கொளுத்தினார்களே…

பம்பாயில் 2 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழித்தார்களே..

குஜராத்தில் கர்ப்பிணியை கற்பழித்து, அவளது வயிற்றை திரிசூலத்தால் கிழித்து, அந்த சிசுவை வெளியே எடுத்து குதறி கொன்றார்களே பாதகர்கள்…

இதையெல்லாம் ரஜினி கண்டித்தாரா? இதெல்லாம் வன்முறை இல்லையா?

தேவையில்லாமல் உபதேசம் என்ற பெயரில் கோபங்களை உருவாக்க கூடாது.

மராட்டியத்தில் பிறந்தோமா? கர்நாடகத்தில் வளர்ந்தோமா?கோடாம்பாக்கத்தில் கலர் படத்தில் நடித்தோமா? காசு பணம் சம்பாதித்தோமா? என அதோடு போய் விடுங்கள்.

தேவையில்லாமல் எதையாவது பேசி, செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பற்றி கனவு காணாதீர்கள் அது பகல் கனவு. அதை தமிழர்கள் கலைத்து விடுவார்கள்.

இரண்டு நடிகர்களை டெல்லியிலிருந்து இயக்குகிறார்கள். ஒருவர் ரஜினி. இன்னொருவர் கமல்ஹாசன். இரண்டு பேரையும் ஒரே ரிமோட் இயக்குகிறது.

காவி அரசியலை பேசி கூட்டத்தை சேர்க்க வேண்டும் என ரஜினிக்கு வேலை திட்டத்தை கொடுத்திருக்கிறார்கள்.
முற்போக்கு மதச்சார்பற்ற அரசியலை , திராவிட, தமிழ் தேசிய அரசியலை பேசி , கூட்டம் சேர்க்க வேண்டும் என கமலுக்கு வேலை திட்டத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

நமது இந்த சந்தேகங்கள் விரைவில் நிருபணமாகும்.

எனவே, இவர்களை எல்லாம் கடந்து, எல்லா மக்களுடனும் இணைந்து இந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

இது நம் நாட்டின் ஐனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த தத்துவங்களை காப்பதற்கான , இரண்டாவது சுதந்திர போராட்டமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காலை 11 மணியிலிருந்து 2.30 வரை நடைப்பெற்ற போராட்ட நிகழ்வில் அந்த பிரம்மாண்ட திடலில் மக்கள் கலையாமல் பேரெழுச்சியோடு முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

அருகில் இருந்த கட்டிடங்களின் மீதெல்லாம் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் ‘ஜன கன தேசிய கீதம் இசைக்கப்பட்டப் போது மக்கள் எழுந்து தேசிய கொடியை அசைத்து உணர்ச்சி ததும்ப பாடினர்.

பொதுச் செயலாளருடன் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட பொருளாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் நவாஸ், ரபீக், அலாவுதீன்,ஷபி, அய்யூப், ஜஹீர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்
24.12.2019