டிச 25, கிருஷ்ணகிரியில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மாநாடு போல நடைப்பெற்றது. இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு... https://m.facebook.com/story.php?story_fbid=2175390609227369&id=700424783390633 மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நாள்தோறும் மக்கள் போராட்டங்கள் வலிமை பெற்று வருகின்றன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட அவர்களால் போராட்டங்களை அடக்க முடியவில்லை. நாட்டின் பல பகுதிகளில் இணைய தள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை சுற்றிலும் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து சீர்குலைந்துள்ளது. பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.தினமும் பல விமான சேவைகள் ரத்தாகின்றன. மக்களின் போராட்டங்களால் தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலை என்றால், நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் சூழல் என்னவென யூகிக்கலாம். பாஜக ஆளும் மாநிலங்களில் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட மக்கள் மீது நடைப்பெற்ற துப்பாக்கி சூடுகளில் இந்துக்கள், முஸ்லிம்கள் என 21 பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். டெல்லியில் அராஜகம் செய்த போலிஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கிறது. ஆயினும் போராட்டங்கள் பெருகியபடியே செல்கிறது. மத்திய அரசு திணறுகிறது. தமிழகம்
You are here
Home > Posts tagged "krishnagiri"