நாடு வளம் பெற இணைந்து பணியாற்றுவோம்..! முதமிமுன்அன்சாரி_MLA அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

#மஜகபொதுச்செயலாளர்.!

உலகம் முழுக்க கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவாகும்,

நம் இந்திய திருநாட்டில் இப்பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய மண்ணில் ஆரம்ப கல்வியையும், உயர்கல்வியையும் வளர்த்தெடுத்தவர்கள் கிறித்தவ பெருமக்கள் என்பது மகிழ்ச்சிகுறிய செய்தியாகும்.

வாய்ப்புகளும் வசதிகளும் அற்ற குக்கிராமங்களில் கூட சேவை நிறுவனங்களை அமைத்து, மக்களுக்கு தொண்டாற்றி வரும் அவர்களின் பணிகளை எல்லோரும் பாராட்டுகின்றனர்.

தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கும், அன்றும், இன்றும் கிறித்தவ சேவை நிறுவனங்கள் ஆற்றி வரும் சேவைகள் எண்ணிலடங்காதது,

இன்று நமது நாட்டில் பாசிச சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகளை மக்களிடம் திணித்து வரும் சூழலில், அவற்றை ஜனநாயக சக்திகளோடு இணைந்து கிறித்தவ மக்கள் எதிர்த்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரிய சேவையாகும்.

அந்த உறவுக்குரிய மனநிலையில்தான், புதிய குடியுரிமை திருத்த சட்டத்தில் (CAA) நேபாளம் மற்றும் பூடானில் வழிபாட்டுரிமை பறிக்கப்படும், கிறித்தவர்களுக்கும் அகதிகளுக்கான வாய்ப்புகளை தர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வாதாடி, போராடி வருகிறது என்பதையும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம்.

நமது நாட்டின் ஜனநாயகத்தையும், வளங்களையும் பாதுகாக்க இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், தலித்துகளும் அண்ணன் தம்பிகளாக இணைந்து நின்று பணியாற்ற இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

அமைதியான சமுதாயத்தை கட்டியமைக்க இறைவனிடம் பிராத்திப்போம் என்று கூறி, அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்.
மு.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
24-12-2019