டிச.24, இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் #CAA & #NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக, மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது.
இதில் பங்கேற்று #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:-
இதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது.
இது விலைவாசி உயர்வுக்கான போராட்டமல்ல. ரயில் கட்டண, பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல.
இது வாழ்வுரிமைக்கான போராட்டம். இது குடியுரிமைக்கான போராட்டம். இது தலைவர்களோ, இயக்கங்களோ, கட்சிகளோ நடத்தும் போராட்டங்கள் அல்ல.
மக்களே மக்களுக்காக நடத்தும் அறவழிப் போராட்டம்! இந்துக்களும், முஸ்லிம்களும், கிரித்தவர்களும், தலித்துகளும் இணைந்து இந்தியாவை காக்கும் அரசியல் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம்.
அதனால் தான் மக்கள் ஆயுதம் கொண்ட படை வீரர்களையே எதிர்த்து நிற்கிறார்கள்.
இதை எந்த கட்சிகளும் அரசியல் அறுவடையாக நினைத்து பயன்படுத்திட நினைத்திட கூடாது. அனுமதிக்கவும் கூடாது. ஏனெனில் உரிமைக்காக கூடும் கூட்டம் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
மக்களுக்காகத் தான் சட்டம். மக்கள் எதிர்க்கும் போது அந்த சட்டங்கள் தேவையில்லை. இதற்கு ஜார்கண்ட் தேர்தல் முடிவே சாட்சி.
எனவே அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டி, இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
பீஹார், மே.வங்கம், சத்தீஸ்கர், புதுச்சேரி, கேரளா வைப் போல, தமிழக அரசும் இந்த கறுப்பு சட்டங்களை அமல்படுத்த கூடாது. தவறு செய்த அதிமுக தலைமைக்கு பாவ மன்னிப்பு கிடைக்க இது ஒன்று தான் வாய்ப்பாகும்.
நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். இந்தியாவின் செல்வங்கள். எங்கள் குடியுரிமையை சந்தேகப்படும் உரிமை எவருக்கும் இல்லை.
தமிழக வீதிகளுக்குள் எந்த அதிகாரி யாவது, இதற்காக பிறந்த சான்றிதழ்களை கேட்டால் கொடுக்க மாட்டோம்.
72 ஆண்டுகளுக்கு பிறகு ஏன் இந்த சந்தேகம். நாடு சந்திக்கும் பொருளாதார சீரழிவை மறைக்க, சர்ச்சைக்குரிய சட்டங்களை போட்டு, மக்களை திசை திருப்பும் தில்லு முல்லு அரசியலை செய்கிறார்கள்.
துப்பாக்கி முனையில் இச்சட்டங்களை அமல்படுத்த முடியாது.
அமைதி வழியில் எங்கள் உரிமை போராட்டம், அனைத்து சமூக மக்களின் துணையோடு தொடரும், இதில் சமரசம் இல்லை.
தலைவர்கள், இயக்கங்கள் இப்போராட்டங்களை நடத்தினால் நீங்கள் சமாதானம், சமரசம் பேசலாம்.
இது மக்கள் கையில் போய்விட்டது. அவர்கள் இயக்க, கட்சி கொடிகளை தூக்கி போட்டு விட்டு, தேசிய கொடியை ஏந்தி போராடுகிறார்கள். அமைதி வழியில் கூடி கலைகிறார்கள்.
இதையும் மீறி துப்பாக்கி தோட்டக்களால், இதை திணிக்க முயன்றால், அதை நெஞ்சில் ஏந்தி மரணிக்கவும் தயங்க மாட்டோம்.
சிந்தும் அந்த ரத்த துளிகளிலிருந்து நீதிக்கான போராட்டங்கள் உயிர் பெறும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
நாங்கள் இதை மேடைக்காக பேசவில்லை. உதட்டால் பேசவில்லை. உள்ளத்தால் பேசுகிறோம். வலியுடன் பேசுகிறோம். கண்ணீரோடு, கதறலோடு பேசுகிறோம். உள்ளக்குமுறலோடு பேசுகிறோம். இதை தயவு செய்து புரிந்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுச் செயலாளருடன் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாவட்ட பொருளாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் நவாஸ், ரபீக், அலாவுதீன்,ஷபி, அய்யூப், ஜஹீர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கிருஷ்ணகிரி_மாவட்டம்.