கோவை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 15லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருட்களை நேரடியாக வழங்க மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் 40க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண குழுவினர் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு கேரள மாநிலம் வய்யநாடு பகுதியில் உள்ள மானந்தாவடி கிறிஸ்த்துவ தேவாலயத்தில் தங்க இடமளித்தனர். பிறகு அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கவுன்சிலர் ஜேக்கோசெபாஸ்டின், மற்றும் சமூக ஆர்வலர் ரபீக், அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு இரு குழுக்களாக மஜக வினர் செயல்பட்டனர். பிறகு வய்யநாடு மானந்தாவடி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அவர்கள் இல்லத்திற்கு மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் தலைமையில் நிவாரண குழுவினர் சென்று நிவாரண பொருட்களை வழங்கினர். பொருட்களை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் நாங்கள் இருக்கும் பகுதி பலருக்கு வர சிரமமாக இருப்பதாக கருதி யாரும் வரவில்லை ஆனால் எங்களை தேடி நீங்களே வந்துள்ளீர்கள் என கூறி கண்ணீர் மல்க நன்றி
Month:
மஜக சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்..!
கடலூர்.செப்.5., இந்திய திருநாட்டின் 2வது ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதகிருஷ்ணன் பிறந்தநாளை வருடம் வருடம் இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இவ்வருடம் அதனை கொண்டாடும விதமாக லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகளில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமான சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி ஆசிரியர்களோடு ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாகிர், துபை மாநகர துணை செயலாளர் ஜாசிம், JH நகர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகி நூர் முஹம்மது, லால்பேட்டை நகர நிர்வாகிகள் பைஜி, ரில்வான் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #லால்பேட்டை_பெருநகரம்
நிவாரண நிதி ஒப்படைப்பு..!
திருவாரூர்.செப்.04 ., கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருவாரூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வசூல் செய்யப்பட்ட நிவாரண நிதியை 4/9/2018 அன்று கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் மாவட்ட பொருளாளர் சேக் அப்துல்லா மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ஆயிஷா ஆகியோர் முன்னிலையில் முதற்கட்டமாக ரூபாய் ஒரு லட்சத்தை மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் அவர்களும், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் முஹம்மது மைதீன் அவர்களும், திருவாரூர், கொடிக்கால்பாளையம்,புலிவலம், பொதக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் முத்துப்பேட்டை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #திருவாரூர்_மாவட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை துவங்கப்பட்டது..!
தூத்துக்குடி.செப்.4., தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி க்கு உட்பட்ட தெற்கு ஆத்தூரில் இன்று மனித நேய ஜனநாயக கட்சி யின் புதிய கிளை துவங்கப்பட்டது. இந்த கிளையின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன் தலைமையில் மாவட்ட துனை செயலாளர் முகம்மது நஜிப், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகளாக கீழ்கன்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் S.முகம்மது சபிர் 9952265682 (கிளை செயலாளர்) வாசிம் அக்ரம் 8828571043 (கிளை பொருளாளர்) தமிம் அன்சாரி 7418712013 (துனை செயலாளர்) விரைவில் தெற்கு ஆத்தூர் கிளை சார்பாக மனித நேய ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், வடக்கு ஆத்தூர் கிளை பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம். 04-09-2018.
மஜக கோவை மாவட்டம் சார்பாக கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு..! இரண்டாம் கட்டமாக 15லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன..!!
கோவை.செப்.03., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாவட்டத்தின் சார்பில் கேரளா வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டன. சுமார் 15லட்சம் மதிப்புள்ள அரிசி, பாத்திரங்கள், காய்கறிகள், பிளாஸ்டிக் பொருட்கள், புதிய உடைகள், பிஸ்கட், வாட்டர் பாட்டில், போர்வைகள், பாய், உள்ளிட்ட பொருட்கள் 3வாகனங்களில் அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், சிங்கை சுலைமான், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி, நிர்வாகிகள், கொடியசைத்து அனுப்பி வைத்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #கோவை_மாநகர்_மாவட்டம். 03.09.18