நாகை.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சி மு.மாநில இளைஞர் அணி துனை செயலாளர் ந.அன்வர்பாஷா அவர்கள் இல்ல திருமண விழா இன்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிருஷ்ணா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இடைவிடாத கட்சி பணிகளுக்கிடையே நேற்றைய தினம் பூருனேவில் இருந்து வந்த பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla,நாகை சட்டமன்ற உறுப்பினர் அவரின் உடல்நிலையும் பாராமல் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள் உடன் மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரகத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் களந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #நாகை_தெற்கு_மாவட்டம்.
Month:
கத்தார் அல் கோரிலும் தடம் பதித்தது மனித நேய கலாச்சார பேரவை..! நான்கு திசையிலும் மஜக நிர்வாகம்..!!
கத்தார்.செப்.06., கத்தார் மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் அல் கோர் மாநகர நிர்வாகிகளாக பின் வரும் சகோதரர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நிசார் அகமது மாநகர செயலாளர் திருப்பத்தூர் (சிவகங்கை ) தொலைபேசி : +974 - 7782 2442 சேக் அப்துல்லாஹ் மாநகர பொருளாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 70517475 செய்யது மீரான் மாநகர துணை செயலாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 77898519 இஸ்மாயில் மாநகர துணை செயலாளர் திருவண்ணாமலை தொலைபேசி:+974 - 66504388 இம்ரான்கான் மாநகர தொண்டரணி செயலாளர் மீசல் (பரமக்குடி) தொலைபேசி: +974 - 31455687 அனைத்து மனிதநேய சொந்தங்களும் இவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல்; #மனிதநேய_கலாச்சார_பேரவை. #MKP_ஊடகபிரிவு. #கத்தார்_மண்டலம். 06/09/18
நாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு..! மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!
நாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார். பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல தரப்பிலும் இவ்வாறு நிவாரணப் பொருள்கள் நாகப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் இதற்கான முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், தொகுதி மக்கள் போர்வைகள், கைலிகள், அரிசி மூட்டைகள், பிஸ்கட் பெட்டிகள், சிறுவர் ஆடைகள், துணிமணிகள், என 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குவிந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும். நாகையிலிருந்து புறப்படும் காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மூலம் கொச்சினுக்கு அனுப்ப, லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டது. அதை தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார். இப்பொருள்களை மஜக நாகை (தெற்கு) மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் பத்து பேர் கொண்ட மஜக குழு, கேரளாவுக்கு எடுத்து செல்கிறது அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மூலம் கொச்சின், அலுவா போன்ற பகுதிகளில் வினியோகப்பட உள்ளது. ஏற்கனவே தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனது 1 மாத சம்பளத்தை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) முன்னாள் பிரதமர் திரு.ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் 27 ஆண்டு காலமாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இதை தமிழக அரசு காலதாமாதயின்றி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள் அனைத்து கட்சியினரின் ஆதரவோடு இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை நினைவு கூர்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நானும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவர்களும், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் இதே கோரிக்கையை பல முறை வலியுறுத்தி இருக்கிறோம். அதன் விளைவாகவே பேரறிவாளனுக்கு தமிழக அரசு பரோல் வழங்கியதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எனவே இவர்களின் விடுதலையை விரைவுப் படுத்துமாறு மாண்புமிகு தமிழக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் வரலாறு, முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்து செல்லும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே 7 பேரையும் சோனியா காந்தியின் குடும்பம்
கேரளா மாநிலத்தில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய மஜக..! துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், வழங்கினார்..!! கண்ணீருடன் நன்றி தெரிவித்த கேரள மக்கள்..!!!
கோவை.செப்.05., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 15லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. அதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருட்களை நேரடியாக வழங்க மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் 40க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண குழுவினர் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு கேரள மாநிலம் வய்யநாடு பகுதியில் உள்ள மானந்தாவடி கிறிஸ்த்துவ தேவாலயத்தில் தங்க இடமளித்தனர். பிறகு அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கவுன்சிலர் ஜேக்கோசெபாஸ்டின், மற்றும் சமூக ஆர்வலர் ரபீக், அவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுத்து நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு இரு குழுக்களாக மஜக வினர் செயல்பட்டனர். பிறகு மீனங்காடி பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களுடன் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் தலைமையில் ஒரு நிவாரண குழுவினர் சென்றனர். அவர்களை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர் பிறகு மஜக நிர்வாகிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம் வெள்ளத்தால் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்து விட்டதாகவும்