நாகை MLA அலுவலகம் மூலம் கேரளாவுக்கு நிவாரணம் பொருள்கள் அனுப்பி வைப்பு..! மு.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்..!!

நாகை.செப்.06., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்கு பொருள்களை அளிக்குமாறு நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கோரிக்கை விடுத்தார்.

பல்வேறு கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகம் என பல தரப்பிலும் இவ்வாறு நிவாரணப் பொருள்கள் நாகப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்டன.

ஆனால், தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் இதற்கான முன் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், தொகுதி மக்கள் போர்வைகள், கைலிகள், அரிசி மூட்டைகள், பிஸ்கட் பெட்டிகள், சிறுவர் ஆடைகள், துணிமணிகள், என 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் குவிந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 2 லட்சமாகும்.

நாகையிலிருந்து புறப்படும் காரைக்கால் – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் மூலம் கொச்சினுக்கு அனுப்ப, லாரிகளில் பொருள்கள் ஏற்றப்பட்டது. அதை தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இப்பொருள்களை மஜக நாகை (தெற்கு) மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் பத்து பேர் கொண்ட மஜக குழு, கேரளாவுக்கு எடுத்து செல்கிறது

அங்குள்ள அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மூலம் கொச்சின், அலுவா போன்ற பகுதிகளில் வினியோகப்பட உள்ளது.

ஏற்கனவே தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தனது 1 மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வெள்ள நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் நிகழ்வில் பேசிய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இதில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர்கள், பொருள்களை அளித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
06/09/2018.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*