நெல்லை.ஜூன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக தென்காசியில் சமூகநல்லிக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெ ற்றது தலைமை மாஸ் M. ஹாஜா மாவட்ட செயளாலர், வரவோற்ப்புரை M.செய்யது அலி மாவட்ட பொருளாலர், முன்னிலை மாவட்ட துணை செயளாலர்கள் நிலா B சாதிக், பொன்னானி M.அபுதாஹீர், B.அல்லாபிச்சை , பன்மொழி R.அபுதாஹீர், மாவட்ட இளைஞர் அணி செயளாலர் MSS இப்றாஹீம் மாவட்ட வர்தக அணி சொயளாலர் ஆகியோர். நல்லிணக்க உரை மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாலர் S.S ஹாரூன் ரஷீத் M.COM அவர்கள், இதில் A.R சாகுல் ஹமீது அவர்கள் (மாநில செயற்குழு உறுப்பினர் மனிதநேய ஜனநாய கட்சி), T.A.முகம்மது அலி இக்பால் அவர்கள் (நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) , A. ஜாஹீர் உசேன் அவர்கள் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகியோர் உடனிருந்தனர். சிறப்பு அழைப்பாளர்கலாக கழந்துகொண்டவர்கள் தொழில் அதிபர் V.T.S.R.முகம்மது இஸ்மாயில் அவர்கள் (மாநில துணை செயளாலர் I.U.M.L), S.டேனியல் அருள்சிங் அவர்கள் மாவட்ட (செயளாலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி),R.சாதிர் அவர்கள் (நகர செயளாலர் தி மு க
Month:
ஈரோடு மேற்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா அரிசி பைகள் விநியோகம்.
ஈரோடு.ஜுன்.13.,மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூர் நகர நிர்வாகம் சார்பில். அந்தியூர் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு அரிசிப் பைகள் வழங்கப்பட்டது. ஜமாத்தார்களின் பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகர செயலாளர் முகமது ஷஃபி அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஈரோடு மேற்குமாவட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ் அவர்கள் அரிசி பைகளை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ். மனித உரிமைஅணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி அரிசி பைகளை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மஜக நகர நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மேற்கு_மாவட்டம் 14-6-2018
தோழர் பெ.மணியரசனை சந்தித்து மஜக பொதுச்செயலாளர் நலம் விசாரிப்பு..!
தஞ்சை.ஜூன்.13., இன்று இரவு 8.45 மணியளவில் தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட #காவிரி_உரிமை_மீட்பு_குழு தலைவர் தோழர் #பெ_மணியரசன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் தாக்கப்பட்ட விதமும், அவரது கைப்பை பறிக்கப்பட்ட செய்தியை பெரிது படுத்தி அதன்முலம் தாக்கப்பட்ட செய்தியின் பின்னணியை திசை திருப்பும் முயற்சியும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்குவதாகவும், இதன் பின்னணியில் #அதிகார_வர்க்கத்தின் சதி இருக்குமே என்ற ஐயமும் எழுவதாக அங்கிருந்த தோழர்கள் குற்றம்சாட்டினார். இத்தாக்குத்தால் முயற்ச்சிக்கு பிறகு, தானும் காவிரி உரிமை மீட்பு குழு தோழர்களும் புது தெம்பை பெற்றிருப்பதாக தோழர் மணியரசன் கூறினார். முன்னதாக திருச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தோழர் மணியரசனை தாக்கிய கும்பலை விரைவாக கைது செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்நிகழ்வின் போது மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் வல்லம் கபீர், பொருளாளர் ஜப்பார், துணை செயலாளர் மைதீன், நகர செயலாளர் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_மாநகர்_மாவட்டம்
மஜக திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பெருநாளை முன்னிட்டு வேஷ்டி சேலை அரிசி விநியோகம்..!
திருப்பூர்.ஜூன்.13. திருப்பூர் மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் #பெருநாள் உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மஜக மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரையாற்றினார். வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர்கள். B.லியாகத் அலி, மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மஜக மாநில பேச்சாளர் கோவை பாரூக் அவர்கள் ஈகையில் சிறப்புகள் குறித்து உரையாற்றி வரக்கூடிய காலங்களில் இன்னும் அதிகமாக மக்கள் பயன்பெறும் வகையில் மஜக சார்பில் உதவிகள் வழங்கப்படும் எனக்கூறி வந்திருந்த மக்களுக்கு அன்பளிப்பு பைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு குடும்பத்துக்கு வேஸ்டி, சேலை, அரிசி அடங்கிய அன்பளிப்பு பைகள் வழங்கப்பட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் m.காதர்கான், கோவை ரஹமத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் i.சாகுல்ஹமீது, தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் t.கபீர், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் j.செளகத் அலி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் பெரிய
இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி தருமா? சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கேள்வி?
இன்று சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விவாதம் தொடங்கியது. அப்போது நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி தனது தொகுதி சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பினார். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! எனது தொகுதிக்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலுக்கு திருப்பணிகள் தொடங்கி இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா ? என்று தங்கள் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன். பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்து சமுதாய மக்கள் தங்கள் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்கள். இதற்கான செலவுகளை அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்கள் இறைநம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்து அறநிலையத் துறை சார்பாக அனுமதி மட்டும் தான் வழங்க வேண்டும். அது தாமதம் ஆவதால் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேள்வி கேட்டதும், சபாநாயகர் அவர்கள் இதற்கு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலளிப்பார் என கூறினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 13.06.18