ஈரோடு:ஜுலை 17.,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் சத்திய மங்கலத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் B.செரீப், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சத்தியமங்கலம் நகராட்சி ஆய்வாளர் வேல் முருகன், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கபசுரக் குடிநீர் சேவை பொது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்றது சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் இறுதியில் சத்தியமங்கலம் நகர செயலாளர் R. சலிம், நன்றியுரையாற்றினார்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
17.07.2020