தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..! தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு..!

ஜூலை.17.,

தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டுவரும், கார்டூனிஸ்ட் வர்மா, கல்யான ராமன், மவுண்ட் கோபால், கிஷோர் கே சாமி, மாரிதாஸ் உள்ளிட்ட பயங்கரவாதிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக்கோரி கூட்டமைப்பு சார்பாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தென்காசி மாவட்ட செயலாளர் பீர்மைதீன், அவர்கள் குறிப்பிட்ட நபர்களின் முகநூல் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் கூட்டமைப்பை சேர்ந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் குறிப்பிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பதிவு செய்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
17-07-2020

Top