தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது.
இதற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
109-வது நாளான இன்று அவர்களுக்கு ஆதரவளித்து மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன அன்சாரி அவர்கள் அவர்களது களத்தில் பங்கேற்றார்.
அவருடன் மாநில துணை செயலாளர் அகமது கபீர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் பண்டாரவாடை மஹ்ரூப் ஆகியோரும் வருகை தந்தனர்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் அவர்கள், விவசாயிகளின் பெயரில் அந்த ஆலை வாங்கிய 300 கோடி ரூபாய் கடனை வாக்களித்தப்படி அந்த ஆலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய 112 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் இதில் தமிழக அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கூறினார்.
பிறகு மஜக-வினரும் விவசாயிகளும் இணைந்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் ஹ. சேக் முஹம்மது அப்துல்லாஹ், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் குடந்தை ஆசாத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜெய்னுதீன், இக்பால் சேட், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, பண்டாரவாடை பாஸித், இராஜகிரி அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.