கோவை.ஜூன்.17., கோவை #பாரதியார்_பல்கலைக்கழக சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று பல்கலைக்கழக தேர்வுகளை வைத்திருந்தார்கள். #ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதை ஒத்தி வைக்குமாறு மாணவ - மாணவிகள் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA விடம் கோரிக்கை வைத்தனர். அவர் இதை தமிழக அரசு கவனத்திற்கு எடுத்து சென்று தேர்வுகளை ஒத்தி வைக்க செய்தார். இதற்காக பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று #மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொடர்புக் கொண்டு நன்றியை தெரிவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாவட்டம்
Month:
IKP பரங்கிப்பேட்டை நகரம் சார்பில் ஃபித்ரா விநியோகம்..!
கடலூர்.ஜூன்.16., கடந்த 14-06-2018 அன்று இரவு 8:00 மணி அளவில் வளைகுடாவில் வசிக்கும் பரங்கிப்பேட்டை நகர மஜக உருப்பினர்கள் சார்பாக ஃபித்ரா நிதி வசூல் செய்யப்பட்டு நகர இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) மற்றும் மஜக நிர்வாகிகள் மூலமாக டில்லிசாஹிப் தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் மற்றும் வளைகுடா நிர்வாகிகளான ஹாஜா மக்தும், அப்துல்ரஜ்ஜாக், ஹாசிம், ஷேக், அரசாத் மற்றும் நகர மனிதநேய சொந்தங்கள் கலந்துக்கொண்டு வினியோகம் செய்யப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_பரங்கிப்பேட்டை_நகரம் #16.06.2018
கோவை மாநகர் மாவட்ட மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள்விநியோகம்.
கோவை .ஜுன்.16.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் வடக்கு கிளை சார்பில். அறிவொளி நகர் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் இரண்டாவது நாளாக ஏழ்மையான குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்கீம் (அர்னால்டு), வடக்கு கிளை பொருளாளர் பயாஸ், துணை செயலாளர் அலி, மற்றும் நிர்வாகிகள் இப்ராஹிம், ஆகியோர் கலந்து கொண்டு பித்ரா பொருட்கள் வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 14-6-2018
மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.
சென்னை.ஜுன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் எழும்பூர் 104வது வட்டம் சார்பில். அப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் திருமங்கலம் ஷமீம் கலந்துக்கொண்டு பித்ரா பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட து.செயலாளர் ரவூப் ரஹீம், எழும்பூர் பகுதி நிர்வாகிகள் அப்பாஸ், முஹம்மது நியாஸ், ராயல் ஹைதர் அலி, கலாம், முர்தசா, சீத்திக், அலி, 104வது வட்ட நிர்வாகிகள் சரீப், ஷபீ, சுல்தான், முஹைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 14-6-2018
மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மஜக சார்பில் பெருநாள் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்.
சென்னை.ஜுன்.14.,மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் புதுப்பேட்டை 61வது வட்டம், 63வது வட்டம் சார்பில். அப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களை கண்டறிந்து, இறைவனின் மிகப்பெரும் கிருபையால் சுமார்250 குடும்பங்களுக்கு பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் என்.ஏ தைமியா கலந்துக்கொண்டு பித்ரா பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், மாவட்ட து.செயலாளர் ரவூப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் யூசுப், 63 வது வட்ட நிர்வாகிகள் ஜப்பார், சாகுல் ஹமீது, ஜலின் ரகுமான், ஹசன் அலி, 61 வது வட்ட நிர்வாகிகள் முனாப், குலாம், பசீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 14-6-2018