#மனிதநேய_கலாச்சார_பேரவை (#MKP) கத்தார் மண்டல தொண்டர் அணி செயலாளர் திருச்சி நஃசிர் பாஷா (எ) டான் பாஷா +974 7007 5797 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மனிதநேய சொந்தங்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் 20.06.18
Month:
நாகையில் மீன்வள பல்கலைகழக திறப்பு விழா..!
நாகை. ஜூன்.20., நாகப்பட்டினத்தில் #மீன்வள பல்கலைக்கழத்தின் நிர்வாக தலைமை அலுவலக கட்டிடத்தை காணொலி மூலம் #முதல்வர்_எடப்பாடியார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபிலிக்ஸ், பல்கலைகழக இயக்குனர்களில் ஒருவரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி காட்சியின்போது முதல்வருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும், கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஸ்.மணியன் அவர்களும் பங்கேற்றார். ஆசியாவிலேயே மீன்வளத்திற்கான பல்கலைகழகம் இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #நாகபட்டினம். 20/06/2018
முத்துப்பேட்டையில் காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புவோம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை செய்தி..) திருவாரூர் மாவட்டம் #முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள #மீன்_மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர். இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி, பதட்டத்தை பரப்புவது புத்திசாலித்தனமல்ல. அங்கு தமிழக காவல்துறை அமைதியை சட்ட ரீதியாக நிலை நாட்டும் என நம்புகிறோம். அவர்கள் பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர். அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். இவண்:- #நாச்சிகுளம்_தாஜுதீன் மாநில செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 19/6/2018
IKP சார்பில் சென்னையில் நடந்த பெருநாள் திடல் தொழுகை..!
சென்னை.ஜூன்.18., கடந்த 16.06.2018 அன்று #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியின் சார்பில் ஐஸ் ஹவுஸ் லேடி வில்லிங்டன் பள்ளியில் முப்தி.உமர் சரீப் காசிமி அவர்கள் குத்பா உரையுடன் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிலால் அஹமது அவர்களுடன் சேர்ந்து மஜக பகுதி செயலாளர் சாகுல் ஹமீது, பகுதி பொருளாளர் ஜலாலுதீன், பகுதி துணை செயலாளர்கள், முஹம்மது அலி இஷாக்,சையத் ஜமால், பகுதி இளைஞரணி நிர்வாகிகள் சலீம், இம்ரான் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் தொழுகைக்கான ஏற்பாட்டை மாவட்ட செயலாளர் M.Y.பிஸ்மில்லா கான், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோரின் வழிகாட்டுதலின் படி மிக சிறப்பாக செய்திருந்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர் NA.தைமிய்யா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ், மாவட்ட பொருளாளர் A.அமீர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு திடல் தொழுகையில் 800க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_IT_WING #IKP_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
தொப்புள்கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கி ரம்ஜானை கொண்டாடிய மஜகவினர்..!
வேலூர்.ஜூன்.17., உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் #ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் பகுதியிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு, அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை வழிபாடுகள் (தூவா) செய்யப்பட்டது. அதன் பின்னர், பெருநாளை முன்னிட்டு குடியாத்தம் பேருந்து நிலையத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொருளாளர் SMD.நவாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் முனவ்வர் ஷரிப் ஆகியோர் தொப்புள் கொடி உறவுகளுக்கு இனிப்பு வழங்கினார்கள், இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #குடியாத்தம்_நகரம் #மஜக_வேலூர்_மே_மாவட்டம் 16.06.2018