சீர்காழி.ஜுன்.06., நாகை வடக்கு மாவட்டம் தைக்கால் துளசேந்திரபும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் கிளை சார்பாக #இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 அடி நீளத்தில் பந்தல் போடப்பட்டு பிரமாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் P.V. பாரதி (#அதிமுக), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் (#திமுக), #பாமக துணைப் பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, சே.ரகுராஜ் (#விசிக), S.ஜெயராமன் ஒன்றிய செயலாளர் (அதிமுக) கமாலுதீன் (#SDPI) உள்ளிட்ட எதிரும் புதிருமான அரசியல் கட்சியின் பிரமுகர்கள், மஜகவின் அழைப்பை ஏற்று ஒரே மேடையில் கூடினர். 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். முக்கியமாக தைக்கால் ஜமாத்தினர் மொத்தமாக வருகை தந்து நிகழ்ச்சிக்கு மெறுகூட்டினர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும், திருமதி துர்கா அவர்களின் தம்பியுமான மருத்துவர் இராஜமூர்த்தி அவர்கள் நோன்பின் மாண்பு குறித்து சிறப்பானதொரு விளக்கவுரையாற்றினார். அவரது உரை அனைத்து மதத்தினர்களின் உள்ளத்தையும் கவரும் வகையில் இருந்து. சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி அவர்கள், துளியும் அரசியல் பேசாமல், நோன்பு குறித்தும், அது ஏற்படுத்தும் நல்ல நோக்கம் குறித்தும் உரையாற்றினார். #மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA
Month:
மஜக தஞ்சை வடக்கு மாவட்ட இஃப்தார் நிகழ்ச்சி..!
குடந்தை.ஜுன்.09., தஞ்சை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் தலைமையில் வழுத்தூர் ராயல் மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக #அஞ்சுமன் அறிவாக நிறுவனர் D.M. ஜபருல்லாஹ், சமூக ஆர்வலர் M.J. அப்துல் ரவூஃப் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் #மஜக மாநில செயலாளர் ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மற்றும் மாவட்ட துணை, அணி, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_வடக்கு_மாவட்டம் 09.06.18
IKP ரியாத் மண்டலம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
ரியாத்.ஜூன்.09., சவுதிஅரேபியா ரியாத் மண்டலம் #இஸ்லாமிய _கலாச்சார_பேரவை-யின் சார்பில் EXIT-8 வெல்கம் உணவகத்தில் நேற்று (08/06/2018) வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் #இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி #IKP மண்டல பொருளாலர் திருச்சி ஜாகிர் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் IKP முன்னால் தலைமை ஆலோசகர் நாகை N.S.ஹமீது அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணை செயலார் M.நிவாஜிதீன், KSATS - மண்டல செயலாளர் தஞ்சை அலி, முன்னால் மண்டல தலைவர் அடியற்க்கை அலி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_IT_WING #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை_ரியாத்_மண்டலம்
UAEயில் நடைபெற்ற மதிமுக இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக பங்கேற்பு..!!
அஜ்மான்.ஜூன்.09., மதிமுகவின் அயல்நாட்டு பிரிவான அமீரக தமிழர் மறுமலர்ச்சி பேரவையின் சார்பில் #மதநல்லிணக்க_இஃப்தார்_நிகழ்ச்சி 08/06/2018 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் பேரவை தலைவர் புளியரை.இசக்கி அவர்கள் தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் நடைபெற்றது. இந்நிகழ்வில் #மஜக-வின் #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை (MKP) சார்பில் அமீரக மண்டல செயலாளர். மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். தமது வாழ்த்துரையில் மதிமுகவின் சார்பில் மதநல்லிணக்கத்தை காக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இஃப்தார் நிகழ்வை பாராட்டியதோடு, தமிழகத்தில் சமூக நல்லிணக்கதை முன்னிலைப்படுத்தி மஜக மேற்கொண்டு வரும் அனைத்து மக்களுக்குமான அரசியலை மேற்கோள்காட்டி பேசினார். மேலும் தமிழகத்தில் வேரூன்ற துடியாய் துடிக்கும் பாசிச சக்திகளை அடியோடு விரட்ட இதுபோன்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் #MKP சார்ஜா மாநகர செயலாளர் அடியற்கை.யூசுப்தீன் உள்ளிட்ட MKP நிர்வாகிகள் மற்றும் திமுக, விசிக, முஸ்லிம் லீக்,மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : #MKP_தகவல் _தொழில்நுட்ப_அணி #MKP_IT_WING #UAE_மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #ஐக்கிய_அரபு_அமீரகம் 08/06/2018
தம்மாம் மண்டலம் IKP சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!
தம்மாம். ஜூன்.09. மஜகவின் அயல்நாட்டு பிரிவான #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை (IKP) தம்மாம் மண்டலம் சார்பில் #இஃப்தார் என்னும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று (08.06.2018) மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சவூதி மற்றும் அணைத்துநாட்டு சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி #IKP_தம்மாம்_மண்டலம் #IKP_IT_WING