சென்னை.ஏப்.18., காவிரி போராட்டத்தில் சிறை சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று மஜக தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தனியரசு MLA, மஜக மாநில செயலாளர்கள் சாதிக்பாட்ஷா, சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் ஷமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாணவர் இந்தியா மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது, கொள்கை விளக்க பேச்சாளர் J.S.மீரான் ஆகியோர் சந்தித்தனர். இவர்களுடன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் ஆகியோரும் சந்தித்தனர். மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவூஃப் ரஹீம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, பூவை நகர செயலாளர் யாசர் அராஃபத் ஆகியோரும் உடனிருந்தனர். மாணவர் இந்தியாவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கபீர் அஹமது(PRO), கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஸரப் ஆகியோரும் மஜக
Month:
மயிலாடுதுறையில் கிருஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!
நாகை. ஏப்.18., நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு கிருஸ்துவ அமைப்பு ஒன்றிணைந்து, தேவாலயங்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மஜக, திமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார் என்ற உந்துதலில் காவி அமைப்புகளை சேர்ந்தவர்கள் நாடெங்கிலும் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தேவாலயங்களை தாக்குகின்றார்கள். கிருஸ்துவர்கள்தான் நம் நாட்டிற்க்கு கல்வியையும், மருத்துவமனைகளையும் கிராமங்கள்வரை கொண்டு சேர்த்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் மூலம், வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மை் மக்களை அணித்திரட்டலாம் என நம்புகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கும், கிருஸ்தவர்ளுக்கும் பெரும்பான்மையான இந்து சமுதாய மக்கள் தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். இந்து ஏக்தா மர்ச் என்ற அமைப்பினர் காஷ்மீரில் கோவிலில் வைத்து 8 வயது ஆசிபா என்ற குழந்தையை சீரழித்து இருக்கிறார்கள். இந்த படுபாவிகளுக்கு ஆதரவாக பாஜகவின் அமைச்சர்களே பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த நாட்டில் உள்ள இந்துகளும், உலக
மஜகவில் இணைந்த குடந்தை தொழிலதிபர்..!
குடந்தை. ஏப்.18., கும்பகோணத்தை சார்ந்த தொழிலதிபர் P.செய்யது இப்ராஹிம் அவர்கள் மஜக மாநில செயலாளர் #ராசுதீன் அவர்கள் முன்னிலையில் தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மஜக_தஞ்சை _வடக்கு 18/04/2018
ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்! மஜக கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் அறிக்கை) தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் அவர்கள் நியமிக்கப்பட்டது முதல் தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகிறது. பேராசிரியர் நிர்மலா தேவி பேசிய ஆடியோவில், மாணவிகளை பாலியல் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்ததும், அதில் கவர்னர் பெயரை சொல்லியிருப்பதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்க்குள் தி வீக் பத்திரிகையின் பெண் நிருபரை கண்ணத்தில் தட்டிக் கொடுத்திருப்பது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விரு சம்பவங்களும் கவர்னரின் நன்மதிப்பை மக்கள் மத்தியில் குலைத்திருக்கிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசை கலந்து ஆலோசிக்காததும், தேர்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கு போட்டியாக தன்னிச்சையாக ஆய்வுகளை நடத்துவதும் தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கிறது. எனவே, தொடர்ந்து சர்சைகளில் சிக்கி வரும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 18.04.18
நாகை பாரதிதாசன் பல்கலை கழக ஆண்டு விழா.. நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..!
இன்று (17/04/2018) நாகப்பட்டினம் பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி யின் ஆண்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முணைவர் மணலி ச.சோம சுந்திரம், பொறுப்பு முதல்வர் முணைவர் ரெ.ராமு, தமிழ்துறை தலைவர் து.சொக்க லிங்கம், வணிக வேளாண்மைத்துறை தலைவர் பேரா.ஜெ ஜெயந்தி, தமிழ்துறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தகவல்;#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்17.04.2018