சேலம்.ஜன.07., சேலத்தில் 50கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் நேற்று இணைத்து கொண்டார்கள். சேலத்தில் மமக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள். இந்நிகழ்சியில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு இணைந்தனர். இந்நிகழ்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாநில தகவல் தொழில்நூட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ், சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன், மாவட்ட துணை செயலாளர் S.சையத் முஸ்தபா, O.S.பாபு, A.மஹபூப் அலி, A.ஷேக் ரபீக், B.முபாரக் மற்றும் அணி நிர்வாகிகள் K.சதாம் உசேன், A.முகமதுஅலி, H.முனவர்கான், அப்ரார் கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாவட்டம் 07.01.2018
Month:
முகவையில் முத்தலாக் விவகாரம்…! திரண்டது மக்கள் வெள்ளம்..!!
முகவை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம். 05.01.2018
திருவாரூரில் திரண்ட சமுதாய எழுச்சி..!
திருவாரூர்.ஜன.5., திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் நேற்று (05-01-2018) வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலாம சபை மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கினைந்த கூட்டமைப்பு சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் அல்ஹாஜ் TMA முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் தலைமைவகிக்க, ஜமால் ஷேக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் AS.அலாவுதீன், பழ.கருப்பையா போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த பல தலைவர்கள் மற்றும் மெளலவி S.பக்ருதீன் பைஜில் போன்ற மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந் நிகழ்ச்சியில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் சந்திக்கும் முதல் மேடை எனபது குறிப்பிட தக்கது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறுதியாக ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம். 06.01.2018
சேலத்தில் மக்கள் எழுச்சி..!
சேலம்.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்றும் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு சேலம் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #TKM_அப்துஸ்ஸலாம்_மிஸ்பாஹி அவர்கள் தலைமை வகித்தார். இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாவட்டம். 06.01.2018
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை உடனே தமிழக அரசு தீர்க்க வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்..!!
சேலம்.ஜன.06., இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார். முன்னதாக கோட்டை மைதானம், நெத்திமேடு, முகமதுபுரா, கல்ரம்பட்டி ஆகிய இடங்களில் 80க்கும் மேற்ப்பட்ட வகணங்களுடன் சென்று மஜக கொடிகளை ஏற்றிவைத்தார். அதன் பிறகு மாவட்ட அலுவலகத்திற்கு சென்று மினிட் புத்தகத்தை பார்வையிட்டு கையெழுத்திட்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கிறது. பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு மீண்டும் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும். இப்பிரச்சினையை தாமதிக்காமல் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார், பிறகு ரஜினி அரசியல் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆரம்பத்தில் அரசியல் நாகரீகத்தின்படி ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறினோம். அதன் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கும், அதன் பிறகு ராமகிருஷ்னா மடத்தில் ரஜினியின் முன்பு நடைபெற்ற உரையாடல் விடியோ பதிவுகளும் வந்த பிறகு, திராவிட இயக்க பற்றாளர்களும், தமிழ் தேசியவாதிகளும் கூறியபடி, அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்ற