சேலம்.ஜன.06., இன்று சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்.
முன்னதாக கோட்டை மைதானம், நெத்திமேடு, முகமதுபுரா, கல்ரம்பட்டி ஆகிய இடங்களில் 80க்கும் மேற்ப்பட்ட வகணங்களுடன் சென்று மஜக கொடிகளை ஏற்றிவைத்தார். அதன் பிறகு மாவட்ட அலுவலகத்திற்கு சென்று மினிட் புத்தகத்தை பார்வையிட்டு கையெழுத்திட்டார்.
அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழ்நாடு ஸ்தம்பித்திருக்கிறது. பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு மீண்டும் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும். இப்பிரச்சினையை தாமதிக்காமல் சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார், பிறகு ரஜினி அரசியல் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆரம்பத்தில் அரசியல் நாகரீகத்தின்படி ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறினோம். அதன் பிறகு ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கும், அதன் பிறகு ராமகிருஷ்னா மடத்தில் ரஜினியின் முன்பு நடைபெற்ற உரையாடல் விடியோ பதிவுகளும் வந்த பிறகு, திராவிட இயக்க பற்றாளர்களும், தமிழ் தேசியவாதிகளும் கூறியபடி, அவருக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்ற சந்தேகம் எங்களுக்கு வலுத்திருக்கிறது என்றார்.
தமிழர்கள் தங்கள் தலைவர்களை களத்தில் தேட வேண்டும், திரையரங்குகளில் தேட கூடாது, MGR காலம் வேறு, இன்றைய காலம் வேறு என்றும் கூறினார்.
தமிழ்நாட்டை வட இந்திய அரசியல் கலாச்சாரம் நுழையாமல் தடுக்க வேண்டுமெனில், அடுத்த15ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள் தான் ஆள வேண்டும்.
தமிழ் தேசியவாதிகள் திராவிட இயக்கவாதிகள், கம்யூனிஸ்ட்கள், சமூக நீதி ஆர்வலர்கள் ஆகியோரின் அரசியல் களமாக தமிழ்நாடு இருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் அரசியல் களத்தில் மண்ணை கவ்வுவார்கள்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார். பேட்டியின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ், மஜக சேலம் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_சேலம்_மாநகர்_மாவட்டம்.
06.01.18