சவூதி அரேபியா தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட அல் ஜூபைல் மனிதநேய கலாச்சாரப் பேரவை கிளை மாதாந்திர கூட்டம் 03-03-2017 வெள்ளிக்கிழமை கிளை செயலாளர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பொருளாளர் எம்.ஹஜ் முஹம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கிளையின் துணைச்செயலாளராக ஹஜ் முகம்மது அவர்களை நியமனம் செய்யப்பட்டது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், இரத்தான முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING தம்மாம் மண்டலம்
வளைகுடா
வளைகுடா
ஜித்தா மண்டல இஸ்லாமிய கலாச்சரப்பேரவை கூட்டம்
சவூதி அரேபியாவின் ரியாத் மண்டலத்தை தொடர்ந்து ஜித்தா மண்டலத்திலும் 03.03.2017 ம.ஜ.க.வின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை சிறப்பிக்கும் வண்ணமாக மண்டல செயலாளர் மஸ்தான் தலைமையில், மண்டல பொருளாலர் அதிரை சேக் முண்ணிலையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து மாநில துனைபொதுச்செயலாளர் அண்ணண் மைதீன் உலவி அவர்கள் காணொளி மூலம் சிறப்புறை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் ஜித்தா மண்டல ஆலோசராக ஆக்கூர் ரிபாய், மற்றும் மதினா நகரத்தின் அமைப்பாளராக திருமுல்லை வாயில் ஜாபர் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். தீர்மானம்.... 1.இக்கூட்டம் தாயகத்தில் நடக்கும் நெடுவாசல் போராட்டத்திற்க்கு முழு ஆதரவு தெரிவித்துக்கொள்கிறது. 2.வரும் காலங்களில் ஜித்தா மண்டலத்தில் உறப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக துனைசெயலாளர் பங்குராஜ் அவர்கள் நன்றிவுரை கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.. மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT_WING ஜித்தா மண்டலம்
குவைத் மண்டலம் MKP சால்வா கிளை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம்…
குவைத்.பிப்.16., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை நடத்தும் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 17/02/2017 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு முர்காப் ரவுண்டானா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல செயலாளர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், கிளை து.செயலாளர் சகோ. சிதம்பரம் ஹாஜா மைதீன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்துகிறார்கள். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்து தர அழைக்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) குவைத் மண்டலம் 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
E.அஹ்மத் சாஹிப் மரணம்…
#தமிழக_மீனவர்களின்_நலனுக்காக_பாடுபட்டாவர்! (மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல் செய்தி) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான E.அஹ்மத் சாஹிப் அவர்கள் இன்று அதிகாலை மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்திற்குரியது. கேரளாவின் செல்வாக்கு பெற்ற தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்த E.அஹ்மத் அவர்கள், சிறுபான்மை மக்களின் வலிமை மிக்க குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்ந்தார். கேரள மக்களின் தேசிய குரலாகவும், பன்னாட்டு அறிவுமிக்க தலைவராகவும் அவர் விளங்கினார். கேரளாவில் 1967 முதல் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் பணியாற்றியதோடு, பல்வேறு வாரியங்களுக்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 1991 முதல் தற்போது வரை தொடர்ந்து 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வெளியுறவுத் துறையிலும், ரயில்வே துறையிலும் இணை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்தியவின் சார்பில் 6 முறை ஐ.நா.வின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை இந்திய ஹஜ் கமிட்டியிலும் பொறுப்பு வகித்துள்ளார். அவர் வெளியுறவுத்துறையில் இணை அமைச்சராக இருந்தப் போது, தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட போதெல்லாம் அதில் தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டெடுக்க அரும்பாடுபட்டார். தமிழக தலைவர்களோடு
பஹ்ரைன் மண்டல மஜக கருத்தரங்கம்…
ஜன.28.,பஹ்ரைன் மண்டலம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் "மோடி சொன்னதும் - செய்ததும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மிக மிக அருமையான முறையில் 27-01-2017 அன்று சவுத் பார்க் ஹோட்டலில் மண்டல செயலாளர் நாச்சிகுளம் ஜான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. மண்டல துணை செயலாளர் வல்லம் ரியாஸ் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல துணை செயலாளர் சாவண்ணா, மண்டல ஆலோசகர் ஆரிப், மருத்துவ சேவை அணி செயலாளர் வசீம் ராஜா, தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் சுபகான், செயற்குழு உறுப்பினர்கள் அலாவுத்தீன், சாகுல் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் உரை நிகழ்த்தினர். இறுதியாக மண்டல பொருளாளர் மன்னை அலி நன்றி கூறினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, பஹ்ரைன் மண்டலம். 27.01.17