(பகுதி – 9) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … நம் தமிழ்நாடு இயற்கை வளங்களைக் கொண்ட நிலம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது . பசுமை காடுகளை கொண்ட முல்லை , உயர்ந்த மலைகளை கொண்ட குறிஞ்சி , மணல் வளம் கொண்ட பாலை , பயிர்கள் செழிக்கும் மருதம் , கடல்பரப்புக் கொண்ட நெய்தல் என ஐவகை நிலமும் நம் தமிழகத்தின் சிறப்பம்சங்களாகும் . இதனை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு நாம் பரிசளிக்க வேண்டும். இன்று தமிழகத்தின் ஐந்துவகை நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது . தென்னிந்தியாவின் மிகப்பெரிய சமவெளியான தஞ்சை சமவெளியில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் உள்ளிட்ட அபாயகரமான திட்டங்கள் அமல்படுத்தகூடாது . அதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி . இதனிடையே தஞ்சை சமவெளியை ஒட்டி அமைந்திருக்கிற புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் , வடகாடு போன்ற பகுதிகளில் ஹைட்ரோ – கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அம்மக்கள் போராடினார்கள் . நானும் அந்த போராட்டக்களத்துக்கு சென்றேன் . உணர்வுபூர்வமான போராட்ட களம் அது . சுயநலமின்றி மக்கள் போராடினார்கள் .அவர்களின் உணர்வை மதித்து
தமிழகம்
தமிழகம்
மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
(பகுதி_8) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது . இதில் எனது தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு அதிக முன்னுரிமைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் . சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் நாகப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . நானும் அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமார் , அண்ணன் O.S.மணியன் ஆகியோரோடும் அங்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டோம் . கண்ணீரோடும் , கதறலோடும் தங்களின் வேதனைகளை கொட்டினார்கள் . அவர்கள் மீது இனியொரு தாக்குதல்கள் நடைபெறுவதையோ , வங்கக் கடலில் தமிழக மீனவர் இனி இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்படுவதையோ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது . இந்த விசயத்தில் மத்திய அரசு இலங்கையை கடுமையாக எச்சரிப்பதோடு மட்டுமின்றி , தமிழக
மஜக மாநில பொருளாளர் நாகை சட்டமன்ற அலுவலகம் வருகை!
நாகை. மார்ச்.27., நேற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com அவர்கள் வருகை புரிந்தார்கள். அதன் ஒரு பகுதியாக நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வருகை தந்தார்கள். நாகை சட்டமன்ற அலுவலக செயலாளர் ராஜ.சம்பத் குமார் மற்றும் தொகுதி செயலாளர் நாகூர் தம்ஜிதீன் ஆகியோர் வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சிறப்பான தொகுதி பணிகள் பற்றி விளக்கினார்கள். செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING நாகை மாவட்டம். 27.03.2017
சிக்கல் பள்ளிகூடத்திற்கு MLA நிதியிலிருந்து நாகை MLA மேஜை , நாற்காலிகள் ஒதுக்கீடு !
நாகை. மார்ச்.27., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து M.தமிமுன் அன்சாரி அவர்கள் மேஜை , நாற்காலிகள் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்தார் . +2 தேர்வு நேரத்தில் உரிய உதவி செய்ததற்காக பெற்றோர்களும் , மாணவர்களும் , ஊர் மக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் . தகவல் ; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 27-03-2017
சீமை கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை..! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி -7) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என பேசியிருந்தேன் . தற்போது மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. பல இடங்களில், நகரங்களில் அப்பணிகள் நடைபெறுகிறது. எனினும் இதற்காக ஒரு சட்டத்தை இயற்றி தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கினால் கேராளாவைப் போல தமிழ்நாடும் 100 சதவீதம் கருவேல மரங்கள் அற்ற மாநிலமாக மாறும். இதற்கு பகரமாக பழம் தரும், நிழல் தரும் மரங்களை நட்டு தமிழ்நாட்டின் பசுமையை வளர்க்கலாம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு சட்டபேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பேசினார் . தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 27-03-2017