சீமை கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை..! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

image

(பகுதி -7)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என பேசியிருந்தேன் .

தற்போது மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது.

பல இடங்களில், நகரங்களில் அப்பணிகள் நடைபெறுகிறது. எனினும் இதற்காக ஒரு சட்டத்தை இயற்றி தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கினால் கேராளாவைப் போல தமிழ்நாடும் 100 சதவீதம் கருவேல மரங்கள் அற்ற மாநிலமாக மாறும்.

இதற்கு பகரமாக பழம் தரும், நிழல் தரும் மரங்களை நட்டு தமிழ்நாட்டின் பசுமையை வளர்க்கலாம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இவ்வாறு சட்டபேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA  பேசினார் .

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
27-03-2017