திருச்சி.ஏப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகரம் காட்டூர் 62வது வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் முன்னிலையிலும், நத்தர்ஷா பள்ளிவாசல் 12வது வார்டு பொருளாளர் பாருக் அலி அவர்கள் முன்னிலையிலும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா அவர்கள் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ஜம் ஜம் பஷீர், ரபீக், இளைஞர் அணி சதாம், தொழில் சங்கம் G.K காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட் ஆகியோருடன், 62வது வார்டு நிர்வாகிகள், பொருளாளர் சதாம் உசேன், துணை செயலாளர்கள், புரோஸ்கான், மொய்தீன் பிச்சை, 12வது வார்டு நிர்வாகிகள், செயலாளர் உசேன், துணை செயலாளர்கள் தீன் அகமது, ஏ.சேட்டு மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டார்கள். தகவல்: தவகல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WINK திருச்சி மாநகர் மாவட்டம். 23.04.2017.
தமிழகம்
தமிழகம்
திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து கிராம மக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல்.ஏப்.21., வேடசந்தூர் தாலுகா பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வந்த ஆண்டிகுளம் என்ற ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக SP இடம் புகார் அளித்தனர். புகார்கள் திண்டுக்கல் SP.திரு சரவணன் பார்வைக்கு சென்றும். கண்டு கொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாக தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு சரவணன் அவர்களை கண்டித்து SP.அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தப்பட்டது. அதற்க்கு நன்றி தெரிவித்து நேற்று 20/04/2016 இரவு 07.30 மணியலவில் பிலாத்து கிராம பொது மக்களின் சார்பாக அநீதி இழைக்கப்பட்ட பொதுமக்களுக்கு நியாயமான முறையில் போராடி நீதியை பெற்று தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இதில் மஜக மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M. அன்சாரி, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர்
திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!
திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம். தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள். இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார். நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர்
மாணவர் இந்தியா – கோடை கால திறன் மேம்பாடு சிறப்பு முகாம்
மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும் கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா? Facebook , What's App - ல் கருத்து சொல்வது மட்டும் தான் நமது சமூக பங்களிப்பா? நாளொரு மேனியும், பொழுதோடு வண்ணமுமாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம்? சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றவது இது தான் இளைஞர்களின் இன்றிமையாத பணியா? இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாணவர் இந்தியா அன்போடு அழைக்கிறது. இரண்டு நாள் முழுநேர பயற்சி முகாம் 2017 மே 13,14 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் { ECR ரோடு } நடைபெற உள்ளது. மாணவர் இந்தியா நடத்தும் திறன் மேம்பாடு கோடை கால பயற்சி முகாமிற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்கள், கலைத்துறையினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பயற்சி வழங்குவார்கள். கல்லூரி மாணவர்கள் மட்டும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமே அனுமதி. இம்முகாமில் பங்கேற்பவர்களின் பதிவு கட்டணம்
நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் நாகை MLA அவர்களுடன் சந்திப்பு!
நாகை.ஏப்.18., நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட MLA அவர்கள் மீனவர்களின் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.04.17