
நாகை.பிப்.18.,நாகை நகராட்சியின் 29-வது வார்டில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா (எ) சாகுல் ஹமீது அவர்களின் தாயார் ஜன்னத் பேகம் அவர்கள் தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் தலைமையிலான மஜகவினர் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
உடன் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா, தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல், மாவட்ட அணி நிர்வாகிகள் பகுருதீன், சுல்தான், நிசாத், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
17.02.2022