கோவை.மே.21., மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர நிர்வாகக் குழுகூட்டம் நகர செயலாளர் ஜெமிஷா தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர் கோவை பாருக், கோவை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கு.சுதீர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகர அணி மற்றும் வார்டு பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 15+நாளுக்கு ஒருமுறை நிர்வாகக்குழு கூட்டுவது என்று முடிவுசெய்யப்பட்டது! ரமலான் மாதம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்காக நன்கொடையாளர்களை சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டது!! 50க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது!! 40க்கும் மேற்பட்ட புதிய கிளைகள் தொடங்குவது என்று முடிவுசெய்யப்பட்டது!! தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம். #MJK_IT_WING 21.05.2017
தமிழகம்
தமிழகம்
நீடூர் நெய்வாசல் மஜக கிளை கூட்டம், நிர்வாகிகள் தேர்வு…
நாகை.மே.22., நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை கூட்டம் நேற்று 21-05-2017 இரவு 8.00 மணிக்கு நடைப்பெற்றது. இதில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக் அவர்கள் தலைமையில், துணை செயலாளர் இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மிஸ்பா, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் ஜெப்ருதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நீடூர் நெய்வாசல் கிளை செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது #கிளை_செயலாளர் : S.அசாருதீன் #துணை_செயலாளர்கள் : S.நசுருதீன் M.பஹத் J.சிராஜூதீன் #பொருளாளர் : F.சுகைல் #இளைஞரணி_செயலாளர் : K.ராசீத் #மாணவரணி_செயலாளர் : J.ஜாசீப் #மாணவரணி_துணை_செயலாளர்கள் : S.நூர்முஹம்மது I.முஹம்மது உசேன் #தொழிலாளர்_அணி : A.R.பைசுல்ரஹ்மான் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை : M.அஹமது #மாணவர்_இந்தியா : A.ஹாக்கில் #மருத்துவரணி : F.ஃபஹத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் இவண், தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் கிளை நாகை வடக்கு மாவட்டம். #MJK_IT_WING 21.05.2017
கமலாபுரத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…
திருவாரூர்.மே.21., திருவாரூர் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை கமலாபுரத்தில் இன்று 21/05/2017 துவங்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலிமற்றும் அடியக்கமங்கலம் நிஜாமுதீன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர் கனி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ், பொதக்குடி கிளை செயலாளர் ஜமால் முகம்மது மற்றும் புலிவலம் கிளை செயலாளர் சேத்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இதில் முக்கிய நிகழ்வாக அமல்ராஜ், அன்புராஜ், ஐயப்பன், ராஜ்கிரண், சரண்ராஜ், கவியரசன், பிரசாத், பிரவீன்ராஜ், ரகுவரன், மற்றும் முரளி ஆகியோர் 11 நபர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் #MJK_IT_WING 21.05.2017
வில்லிவாக்கம் பகுதியில் மஜகவின் கொடியேற்று விழா…
சென்னை.மே.21., இன்று 21.05.2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி சிட்கோ நகர் 94, 95-வது கிளையில் மூன்று இடங்களில் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி செயலாளர் P.M.ஷாகுல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் பீர் முஹம்மது, R.K.மைதீன் ஆகியோர் கொடி ஏற்றி வைத்தார்கள். அம்பத்தூர் நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர் P. M.ஷாகுல் ஹமிது, து.செயலாளர் மற்றும் பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING மத்திய சென்னை மாவட்டம். 21.05.2017
நாகையில் மெல்ல மெல்ல சீராகும் தண்ணீர் விநியோகம்…!
நாகை.மே.19., நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நாகை சடமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலெக்டர் மூலம் தொடர் முயற்சிகளை மேற்க்கொண்டார். TWAD மூலம் கொள்ளிடத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி பெற்றார். இதுபோக, அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தற்போது கீழ்வேளூரில் புதிய ஆழ்துளை கிணறு ரூபாய் 25 லட்சம் செலவில் போடப்பட்டு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகை நராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்ட கலெக்டர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் ஜான்சன் அவர்களுக்கும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மே, ஜூன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய நான்கு மாதங்களுக்கான நாகை நகராட்சியின் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 19.05.17