(04/06/2017 செவ்வாய் அன்று தமிழக சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் 'தகவல் கோரலின்' கீழ் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை) மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே.... நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த IND-TN-06-MM-523 எண் கொண்ட விசைப்படகில் 24-06-2017 அன்று 8 மீனவர்களும் புறப்பட்டனர். 24-06-2017 அன்று கோடியக்கரைக்கு நேர்கிழக்கே 33 நாட்டிகல் மைல் தொலைவில் நமது இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.முவிஷ் 2.செல்வம் 3.ராஜசேகர் 4.ரமேஷ் 5.சக்திவேல் 6.செந்தில் 7.வினோத் 8.சங்கர் ஆகிய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுவதால், அவர்களது குடும்பங்களும் கஷ்டத்தில் தவிக்கின்றன. அந்த மீன்பிடி படகின் விலை 66 லட்சமாகும். அதில் உள்ள பொருட்களின் மதிப்பு 12 லட்சமாகும். அதுபோல எனது நாகை தொகுதிக்கு உட்பட்ட நம்பியார் நகரை சேர்ந்த சத்யன், N.சங்கர், P.செல்லக்கண்ணு, விஜயவேல் ஆகியோருக்கு சொந்தமான நான்கு விசைப்படகுகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவருக்கும் படகுகளை மீட்டுத்தர வேண்டும். 100 சதவீத மானியத்தில் இவர்களுக்கு படகுகளை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் 135 படகுகள் இலங்கை
தமிழகம்
தமிழகம்
கதிராமங்கலம் பிரச்சனையை முன்னெடுப்போம்…! சட்டமன்ற வளாகத்தில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், கவுதமன் பேட்டி!
சென்னை.ஜூலை.03., கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோரும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தனர், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அவைக்கு அப்போது வரவில்லை. இந்நிலையில் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் எழுந்து நின்று சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டனர் அனால் சபாநாயகர் நாளை பேசுங்கள் என்றார். இந்நிலையில் கதிராமங்கலத்தில் நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து முதல்வரின் பதில் திருப்திகரமாக இல்லாததால், இது குறித்து தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சட்டசபை வளாகத்தில் சந்தித்தனர். அப்போது போராட்டக்குழுவின் சார்பில் இயக்குனர் கெளதமன், தோழர் சரவணராஜன் ஆகியோரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். கதிராமங்கலத்தில் என்ன நடைபெற்றது என்று அரசு விளக்க வேண்டும் என்று கோரினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சட்டமன்ற வளாக செய்தி குழு, சென்னை. 03.07.2017
பழனியில் அனைத்து இஸ்லாமிய அமைப்பு மற்றும் பாசிசத்திற்கு எதிரான கட்சிகளுடன் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : மஜக பங்கேற்பு..!
திண்டுக்கல்.ஜூலை.02., திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விவசாயத்திற்காக மாடுகளை வாங்கி சென்ற துரை மற்றும் செந்தில் இவர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்கிய மதவெறி பிடித்த VHP, RSS, இந்து முன்னணி, சிவசேனா, பா.ஜ.க, ஆகிய பாசிசவாதிகளை கண்டித்து பழனி டவுன் முஸ்லிம் தர்மபரிபாலனச் சங்கம் தலைமையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் மற்றும் விடுதலை சிறுத்தைகள், DYFI, இந்திய குடியரசு கட்சி, தே.மு.தி.க, CPM, CPI, நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தா.ம.க, ம.தி.மு.க, காங்கிரஸ், தி.மு.க, திராவிட கழகம், திராவிட விடுதலை கழகம், தமிழ் புலிகள், நீலப்புலிகள், அனைத்து ஜமாத்தார்களும் மற்றும் அனைத்து விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும், பாசிச எதிர்ப்பாளர்களும், பொதுமக்களும், மாடு வியாபாரிகளும் இந்த பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கண்டனத்தை பதிவு செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஹபீபுல்லா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர். ஹைதர்அலி கண்டன உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING மனிதநேய ஜனநாயக கட்சி. திண்டுக்கல் மாவட்டம். 2.7.2017
சிறைக் கைதி திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களுடன் மஜக இணை பொதுச் செயலாளர் சந்திப்பு…!
மதுரை.ஜூன்.02., கடந்த 14 வருடமாக சிறையில் இருக்கும் திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்கள் சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரை அரசு தலைமை இராசாசி மருத்துவமனையில் வாரந்தோறும் செவ்வாய் - வெள்ளிக்கிழமைகளில் டயாலிஸ் செய்து வருகிறார். அவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் K. M. முகம்மது மைதீன் உலவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மதுரை தெற்கு மஜக மாவட்ட பொருளாளர் மைதீன் அவர்கள் உடன் இருந்தார். கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி MLA அவர்கள் சட்டப்பேரவையில் அவரின் உடல் நலம் பற்றி பேசியது குறித்தும், அப்போது சிறைத்துறை அமைச்சர் சண்முகம் அவர்கள், மாற்று கிட்னி கிடைத்தால் அரசு மருத்துவமனையில் பொருத்தத் தயார் என்று அறிவித்ததையும் அவரிடம் இணைப் பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார். விரைவில் கட்சி சார்பில் மாற்றுக்கிட்னிக்கான வாய்ப்பு ஏற்படுத்தி, ஒத்துழைப்பு நல்கத் தயார் நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறப்பட்டது. கட்சிக்கு தம் நன்றியை மீரான் மைதீன் பதிவு செய்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. மதுரை தெற்கு மாவட்டம் 01.07.2017
பாராம்பரியத்தை இழக்காமல் பாடத்திட்டங்கள் தேவை..!
(ஜூன் 15 அன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பேசிய உரையின் நிறைவுப்பகுதி ) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ...! பள்ளிக்கல்வித்துறையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. CBSE – பாடத்திட்டம் மட்டுமே சிறந்ததாக கருதி , அதைமட்டுமே பின்பற்றிவிடாமல் உலகம் முழுக்க மாறிவரும் நவீனகல்வி முறைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் சிங்கப்பூரின் கல்வித்துறையை தொடர்புக்கொண்டு அதில் உள்ள நல்ல முன்மாதிரிகளை நமது பாடத்திட்டங்களில் கொண்டுவர முயற்சிக்கலாம் . மேலும் கல்வி என்பது பண்பாட்டின் கூறு என்பதால், நமது தமிழ்நாட்டின் கலாச்சாரங்களை, பாரம்பரியங்களை இழக்காமல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதுக்கும், அவர்களின் புரிதலுக்கும் ஏற்றார் போல, புத்தக சுமைகளை குறைத்து செயல்வழி கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் 6 முதல் 10 வகுப்பு வரை உடல் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் செயல் வடிவபாடங்கள் உருவாக்க வேண்டும். சீனாவில் ஆரோக்கியமான முறையில் வளரும் தலைமுறையினர் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். அதனால் அங்கு இளம் வயது பிள்ளைகள் வலிமையான உடல்கட்டோடும், நோயின்றியும் உணர்கிறார்கள். இதை