கோவை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர் அறக்கட்டளை இணைந்து கோவை அரசு மருத்துவமனையின் அவசர தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்கள் தலைமையில் இருப்பிட மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, நிர்வாகிகள் அஜீஸ், அக்கீம், பிரோஸ், அபு, காதர் மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர் அறக்கட்டளைநிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 10.08.17
தமிழகம்
தமிழகம்
குடியாத்தம் நகரில் மஜகவின் முயற்சியால் மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
குடியாத்தம்.ஆக.10., டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக குடியாத்தம் நகரம் 7, 8- வது வார்டில் குடியாத்தம் நகராட்சி சார்பாக மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமை நகராட்சி ஆணையர் சங்கர் அவர்கள் துவங்கி வைத்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசயாம் வழங்கினார். இம் மருத்துவ முகாமில் வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவி மற்றும் மருத்துவ அலோசனையை பெற்றனர். பின்னர் சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் ஒரு முறை ஆய்வு பணி மேற்கொண்டார். 800- மீட்டர் அளவுக்கு புதிய சாலைகள் மற்றும் கால்வாய்கள் பழைய தண்ணீர் சிண்டக் தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர உடனடியாக நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்செல்வன் SO, கெளவுசல்யா ஆய்வர், அரசு மருத்துவர் சிலம்பரசன், பிரகாஷ் SI, பிரபு,
கல்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மாவட்ட பொதுக்குழு…
காஞ்சி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு கல்பாக்கத்தில் மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்கள். மாவட்டப் பொருளாளர் மீராஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் யூஸுப், மாவட்டத் துணைச் செயலாளர் சர்தார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாவட்டம், ஒன்றியம், கிளை நிர்வாகிகளும் பங்கேற்று கட்சியின் எதிர்கால செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில், காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். முன்னதாக, கல்பாக்கத்தில் இரண்டு இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்குழு நிறைவடைந்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுச் செயலாளர் பேட்டியளித்தார். பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்பாக்கத்தைச் சார்ந்த மாவட்டத் துணைச் செயலாளர் சமியுல்லாஹ், IKP மாவட்டச் செயலாளர் அப்துல் ரஷீது, நகரச் செயலாளர் காலிப் உட்பட நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம் 09.08.17
திருக்கழுக்குன்றம் ஜமாத் சார்பில் மஜக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு…!
காஞ்சி.ஆக.09., காஞ்சி தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூஸுப், மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் வருகை தந்தனர். அனைவரையும் வரவேற்ற ஜமாத் தலைவர் செய்யது ஹாரூன் அவர்கள் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். பின்னர், ஜமாத் சார்பில் பலவேறு கோரிக்கைகளை பொதுச்செயலாளரிடம் எடுத்துறைத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு மஃரிப் தொழுதுவிட்டு விடை பெற்ற போது, உள்ளூர் பிரமுகர்கள் வருகைத்தந்து மஜகவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம் 09.08.17
கறம்பக்குடியில் மஜக மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்..!
புதுகை.ஆக.09., கறம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் நிலவேம்பு குடிநீர் முகாம் இன்று காலை கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கறம்பக்குடி அரசு மருத்துவமனை அலுவலர் Dr.தாஹிராபானு , சித்த பிரிவு மருத்துவர் Dr. கண்மணி மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் எவரெஸ்ட் சுரேஷ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர் . இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் முகம்மது ஜான் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் , சமூகநல ஆர்வலர்கள், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பெற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கறம்பக்குடி ஒன்றியம், நகரம் புதுக்கோட்டை மாவட்டம்.