திருக்கழுக்குன்றம் ஜமாத் சார்பில் மஜக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு…!

image

image

காஞ்சி.ஆக.09., காஞ்சி தெற்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூஸுப், மாவட்ட துணைச் செயலாளர் சர்தார் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் வருகை தந்தனர்.

அனைவரையும் வரவேற்ற ஜமாத் தலைவர் செய்யது ஹாரூன் அவர்கள் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர், ஜமாத் சார்பில் பலவேறு கோரிக்கைகளை பொதுச்செயலாளரிடம் எடுத்துறைத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பிறகு மஃரிப் தொழுதுவிட்டு விடை பெற்ற போது, உள்ளூர் பிரமுகர்கள் வருகைத்தந்து மஜகவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
காஞ்சி தெற்கு மாவட்டம்
09.08.17