குடியாத்தம் நகரில் மஜகவின் முயற்சியால் மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

image

image

குடியாத்தம்.ஆக.10., டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக குடியாத்தம் நகரம் 7, 8- வது வார்டில் குடியாத்தம் நகராட்சி சார்பாக மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமை நகராட்சி ஆணையர் சங்கர் அவர்கள் துவங்கி வைத்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசயாம் வழங்கினார்.

இம் மருத்துவ முகாமில் வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவி மற்றும் மருத்துவ அலோசனையை பெற்றனர்.

பின்னர் சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் ஒரு முறை ஆய்வு பணி மேற்கொண்டார்.

800- மீட்டர் அளவுக்கு புதிய சாலைகள் மற்றும் கால்வாய்கள் பழைய தண்ணீர் சிண்டக்  தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர உடனடியாக நகராட்சி அதிகாரிகளை  தொடர்பு கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில்  தமிழ்செல்வன் SO, கெளவுசல்யா ஆய்வர், அரசு மருத்துவர் சிலம்பரசன், பிரகாஷ் SI, பிரபு, சதிஸ், சிவகுமார், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த குடியாத்தம் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் V.முபாரக், நகர து செயலாளர் சலிம் , கிளை நிர்வாகிகள் ஜெனுலப்தீன், கபீர்  அல்தாப் , முஜீப், சிபகத்துல்லா, பிலால், சாதிக், அலீம், முபாரக், அபுல், நிஜாம், டானிஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
குடியாத்தம் நகரம்.
10.08.17