தூத்துக்குடி.07., தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது. கடந்த மாதம் ஆகஸ்ட் (26-08-2017) அன்று திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு SRM பேருந்தில் காயல்பட்டினம் இளைஞர் மீராதம்பி பணம் செய்த போது, அதே பேருந்தில் முன் பதிவில்லாமல் குடிபோதையில் பயணம் செய்த இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மீரா தம்பி படுகொலை செய்யப்பட்டார். இத் துயரச் சம்பவத்தை அறிந்தவுடன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள். மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்வர்களை உடனடியாக கைது செய்ய மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கொலை செய்யப்பட்ட மீராதம்பிக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்குமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார். படுகொலை செய்யப்பட்ட மீராதம்பியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கக்கோரியும், மற்றும் படுகொலைக்கு காரணமான SRM பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை
தமிழகம்
தமிழகம்
மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிராக…!! மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!!!
நாகை .செப்.11.,நாகை தெற்கு மாவட்டம், திட்டச்சேரி பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சி-யின் (MJK) சார்பில் காயிதே மில்லத் பேருந்து நிலையம் அருகில் மியான்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாசுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் செய்யது அஹமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லாஹ், தோப்புத்துறை சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மஜக மாநில இணை பொதுச்செயலாளர் K.M.மைதீன் உலவி அவர்களும், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பேரூர் கழக துணை செயலாளர் ஷேக் பரீதுத்தீன், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் சுல்தான் சர்கூர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இறுதியில் பேரூர் கழக துணை செயலாளர் அப்துல் பாஸித் நன்றி கூறினார். இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்ச்சிமிக்க எதிர்ப்பை அங்கு
பிஞ்சு நெச்சங்களில் நஞ்சை விதைக்காதீர்! தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தனியரசு_MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA வெளியிடும் கூட்டறிக்கை) தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல் பட்டு வரும் சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும்,தமிழர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவருமான H.ராஜாவை தலைவராக்க தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களும்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்,அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கினறன. தமிழகம் சமூக நல்லிணக்கம்,சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது.அதுவும் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ-சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில்,சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் பேசிவரும் H.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியளிக்கிறது.பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது.இதை ஏற்கவே முடியாது.வண்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொறுப்புகளுக்கு சகிப்புத்தன்மையும்,பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பரந்தமனமும்,தூரநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டு வர வேண்டும் என்று
மஜக சார்பில் கோட்டைப்பட்டினத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்…!
புதுகை.செப்.10., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் , மணமேல்குடி ஒன்றியம் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் கோட்டைப்பட்டினத்தில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மணமேல்குடி ஒன்றிய செயலாளர் அப்சல் கான் அவர்களை தலைமை தாங்கினார். கோட்டைப்பட்டினம் கிளைச்செயலாளர் ஹைதர் அலி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர் அலி, ஒலி முஹம்மது, செய்யது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மேலும் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மஜக மாவட்ட செயலாளர் ஆசிரியர் முபாரக் அலி, மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டைப்பட்டினம் A.M.ஹாரிஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், ஆவுடையார் கோயில் ஒன்றிய செயலாளர் அப்துல்லாஹ், ஒன்றிய பொருளாளர் முஹம்மது குஞ்சாலி, அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது, அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், தொழிற்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் முகம்மது காலித், மாவட்ட
மஜக வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம்…!
வேலூர்.செப்.07.,வேலூர் கிழக்கு மாவட்ட அமைப்புக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் கிளைகளை கட்டமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது எனவும் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் இனபடுகொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 11.09.2017 திங்கட்கிழமை நடத்துவது எனவும், அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், மருத்துவ மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், மாணவர் இந்தியா சார்பாக அடுத்த ஒரிரு நாட்களில் போரட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் சலீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன், ரபிக் ரப்பானி (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 07.09.17