முதல்வருடன் தூத்துக்குடி மஜக நிர்வாகிகள் சந்திப்பு..! படுகொலை செய்யப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை..!!

image

தூத்துக்குடி.07., தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர் உசேன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.

கடந்த மாதம் ஆகஸ்ட்
(26-08-2017) அன்று  திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு SRM பேருந்தில் காயல்பட்டினம் இளைஞர் மீராதம்பி பணம் செய்த போது, அதே பேருந்தில் முன் பதிவில்லாமல் குடிபோதையில் பயணம் செய்த இருவருடன் ஏற்பட்ட  வாக்குவாதத்தால் மீரா தம்பி படுகொலை செய்யப்பட்டார்.

இத் துயரச் சம்பவத்தை அறிந்தவுடன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பொதுச் செயலாளர்
M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள்.

மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்வர்களை உடனடியாக கைது செய்ய மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA  அவர்கள், கொலை செய்யப்பட்ட மீராதம்பிக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்குமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார்.

படுகொலை செய்யப்பட்ட
மீராதம்பியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கக்கோரியும், மற்றும் படுகொலைக்கு காரணமான SRM பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் தூத்துக்குடி (தெ) மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் நேரில் வலியுறுத்தினார். பின்னர் கோரிக்கை மனுவும் முதல்வரிடம் வழங்கப்பட்டது.

மஜக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உற்றுநோக்கிய முதல்வர்,  இழப்பீடு மற்றும் அரசுவேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.
மேலும் SRM பேருந்து நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், மாவட்ட துணைசெயலாளர் முகம்மது நஜீப், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முசம்மில், கொலை செய்யப்பட்ட மீராதம்பியின் தகப்பனார் பஹ்ருதீன், மீரா தம்பியின் சகோதரி சுலைஹா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
தூத்துக்குடி மாவட்டம்.
07.09.2017.