ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெற்றது.
சமூக நல்லிணக்கத்தை போற்றும் வகையில் எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்களும் அவரவர் சமூகத்தின் சார்பில் வரவேற்பு பேனர்களை வைத்து தங்கள் உறவு முறையை வெளிக்காட்டியிருந்தனர்.
அதுபோல் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் பிரமுகர்கள் வந்திருந்ததால், அவர்களும் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்பு பேனர்களும், கொடிகளும் கட்டப்பட்டிருந்தது.
இப்பள்ளியை வடிவமைத்த பொறியாளர் பால் பாண்டியனுக்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனர்.
அவர் அதை இப் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்து விட்டாராம்.
இதையறிந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், அவரிடம் கைக்குலுக்கி அவரது மனிதநேயத்தை பாராட்டினார்.
இந்நிகழ்வில் பேசிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், இப்பள்ளியில் ரமலான் நேரங்களில் எல்லா சமூக மக்களையும் அழைத்து இஃப்தார் விருந்தை அளிக்க வேண்டும் என்றும், மற்ற மாதங்களில் பள்ளியில் நடைபெறும் தொழுகை முறைகளை பல்வேறு சமூக மக்களையும் அழைத்து விளக்க வேண்டும் என்றும் அது புரிதலுக்கு வழி வகுககும் என்றும் பேசினார்.
இணக்கமான நிகழ்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஃபாஸிஸவாதிகளை தனிமைப்படுத்த சிறுபான்மையினர் மட்டுமே கைக்கோர்ப்பது சாத்தியமல்ல என்றும், பெரும்பான்மையினரின் உள்ளங்களையும் வென்றெடுத்து அவர்களையும் இப்பணியில் இணைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மதவெறி எந்த தரப்பிலிருந்து வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றும், அது தான் நீதி என்றும் பேசினார்.
அவரது உரைக்கு பலத்த கைத்தட்டல் எழுப்பி மக்கள் வரவேற்றனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் கண்ணப்பன், பேரா. காதர் மைதீன் Ex MP, முன்னாள் வக்பு தலைவர் செ..ஹைதர் அலி, நவாஸ் கனி MP, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மவ்லவி சதுதூதீன் பாகவி, முகம்மது மூனீர், மவ்லவி, இல்யாஸ் ரியாஜி, பவர் குரூப் ஜாகீர், அல் பரிதா குழுமம் அபுல் கலாம், ஜமாத் தலைவர் முஹம்மத் மன்சூர், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் பொறியாளர் சைபுல்லாஹ், பேரா. அப்துல் சலாம் ஆகியோருடன் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகவை நசீர், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மீரான், ஹாஜா, அஜ்மல்தீன், தொண்டி ஷேக், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்டம் முழுவதி விருந்து 50 க்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகளும் உடன் வருகை தந்தனர்.