உமர் பாரூக் தாவூதி ஹஜ்ரத் மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி இரங்கல்!

ஜமாத்துல் உலமா சபையின் கெளரவ தலைவரும், ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரியின் நீண்ட கால முதல்வருமான பெருமதிப்புக்குரிய M.S. உமர் ஃபாரூக் தாவூதி ஹஜ்ரத் அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்தார்கள் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவர் இஸ்லாமிய சட்டக்கலையில் ஒரு மாபெரும் அறிஞராக திகழ்ந்தவர். அதில் தகவல் களஞ்சியமாக போற்றப்பட்டவர்.

ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களை உருவாக்கிய பேராசிரியர்.

மார்க்கப் பணிகள் மட்டுமின்றி, அரசியல் துறையிலும் தனது பங்களிப்புகளை செய்தவர்.

1987 ஆம் ஆண்டு ஷாபானு வழக்கு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் G. M. பனாத்வாலா அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றினார்.

அதற்கு இவர்கள்தான் குறிப்புகளை வழங்கியவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

அப்படிப்பட்ட ஆளுமையும், அறிவும் மிக்கவருடன் பழகிய நிமிடங்கள் மன நிறைவை தருகிறது.

அவரை சந்திக்கும் போதெல்லாம் மஜக-வின் பணிகள் குறித்து பாராட்டுவார்.

அன்னாரின் பிரிவில் வாடும் அவரது மகனும், மஜக-வின் தகவல் தொழில் நுட்ப அணியின் மண்டல செயலாளருமான ஈரோடு இஹ்சான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், அவர் மீது அன்பு கொண்டவர்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளை இறைவன் மன்னித்து, அவருக்கு உயரிய சுவர்க்கம் கிடைத்திட பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

18.12. 2022