மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் 5 இடங்களில் கட்சியின் கொடியேற்று நிகழ்வுகள் நேற்று (18.12.2022) நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாநில செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபீ, மாநில துணை செயலாளர் அஸாருதீன், மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்பித்தனர்.
கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஆகிய பகுதிகளில் பாலவாக்கம் காதர் மற்றும் அப்துல் ரஷீத் ஆகியோர் தலைமையிலும், கானத்தூர் பகுதியில் ஹபீப் ரஹ்மான் தலைமையிலும் கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கண்டோன்மன்ட் H.அப்துல் சமது, ECR, N. அப்துல் சமது, மாவட்ட இளைஞரணி செயலாளர் R.பைசுல்லா, மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் A. அப்துல் சமது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேக் மீரான், மற்றும் ஆலந்தூர் சலீம், ஆலந்தூர் பகுதி செயலாளர் T. கபீர், ஆலந்தூர் பகுதி பொருளாளர் பஷீர் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.