You are here

சிவகங்கை… பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்… மஜக மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக்அலி பங்கேற்பு….

மார்ச்.30.,

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி INDIA கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடி ஒன்றியம், கீரமங்கலம் மற்றும் அறந்தாங்கி தெற்கு ஒன்றியங்களில் நடைபெற்றது.

மத்திய முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம், மாண்புமிகு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாண்புமிகு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின், மனித உரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி பங்கேற்று பேசினார்.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முகம்மது இப்ராஹிம் தலைமையில் கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் நோக்கியா சாகுல், ஒன்றிய செயலாளர் பகுருதீன், அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது மற்றும் திரளான மஜக-வினர் கலந்துகொண்டனர்

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி #சிவகங்கை_நாடளுமன்ற_தொகுதி
30.03.2024.

Top