குவைத்தில்.. மஜக சார்பில் நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

மார்ச்.30.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் தொடர்ந்து எட்டாம் ஆண்டு நிகழ்வாக மாபெரும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் தலைமையில் நேற்று (29-03-2024) வெள்ளிக்கிழமை தஸ்மா அரங்கில் நடைபெற்றது

துவக்கமாக மண்டல பொறியாளர் அணி செயலாளர் பேர்ணாம்பேட் Er.துஃபைல் நீதிபோதனை வழங்க, மண்டல IKP செயலாளர் நீடூர் முஹம்மது ஹாலிக் வழங்க, மண்டல கொள்கை பரப்பு செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

மண்டல அவைத்தலைவர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல பொருளாளர் பொதக்குடி சதகத்துல்லாஹ், தந்தை பெரியார் நூலகம் காப்பாளர் தோழர் சித்தார்த், பொறியாளர் மணிவாசகன், பரக்கா டேட்ஸ் அக்பர், கூனிமேடு சாதிக் பாஷா, மவ்லவி அலி ரஷாதி, தோழர் சிவபிரகாசம், அக்பர் உணவகம் சிராஜூதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்

இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி அப்துல் ஹமீது சரயீ அவர்கள் ‘இஸ்லாம் கூறும் குடும்ப உளவியல்’ என்ற தலைப்பில் மிக சிறப்பாக சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், தமிழ் ஆர்வளர்கள், பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என குவைத் வாழ் தமிழர்கள் திரளானோர் நோன்பின் மான்பை போற்றி நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்

வருகை தந்த அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பேரிச்சை, ஜூஸ் வகைகள், இனிப்புகள் மற்றும் மூன்று வகையான உணவுகள் பரிமாறபட்டது

இறுதியாக தாருல் சபா தலைவர் மவ்லவி அலி ரசாதி அவர்கள் துஆ மஜ்லீஸ் வழங்க, மண்டல துணை செயளாலர் ஏனங்குடி பாஜில் நன்றியுரை வழங்கினார்.

மண்டல துணை செயலாளர்கள் சுவாமிமலை ஜாஹிர் உசேன், ஆயங்குடி நாசர், மண்டல மருத்துவ அணி செயலாளர் நாகை இப்ராஹீம், மண்டல தொண்டரணி செயலாளர் தலைஞாயிறு கமருதீன், ம.இளைஞரணி செயலாளர் SS நல்லூர் யாசின், ம.IT wing செயலாளர் முஜம்மில், மண்டல தொழிலாளர் அணி செயலாளர் நாச்சிகுளம் அப்துர் ரஹ்மான்,

ம.மருத்துவணி துணை செயலாளர் விளாங்குடி தாஹிர், IKP துணை செயலாளர் நீடூர் ஜாஹிர், ம.தொண்டரணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜாபர், ம.வணிகரணி துணை செயலாளர் நெல்லை தாஸ்தகீர், ம.முன்னாள் துணை செயலாளர் மாயவரம் சபீர், ம.முன்னாள் நிர்வாகி திருக்கோவிலூர் சலீம், செயற்குழு உறுப்பினர்கள் திருவாடுதுறை ஆசிக், தஞ்சை ஜாஹிர், ஆயங்குடி ஜியா, யூனுஸ் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் சிறப்பாக களமாடினர்

தகவல்;
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MJK_ITwing_Kuwait
#குவைத்_மண்டலம்
#mkpitwing