இராமநாதபுரம்…..மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம்!! இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் பங்கேற்பு….

மார்ச்.31.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இராமநாதபுரம் பாரளுமன்ற தொகுதியின் INDIA கூட்டனியின் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, திருச்சுழி, அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைத்து தொடர் பிரச்சாரமும் துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக மக்கள் கூடும் இடங்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள் மார்க்கெட் என்று அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் கருத்தமரைக்கா, சித்தார் கோட்டை ஆஸாத், அபுல் ஹசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பணைகுளம் ஆசிக், MJTS மாவட்ட செயலாளர் தொண்டி சேக், நகர செயலாளர் செய்யது அலி நகர தகவல் தொழில் நுட்ப அணி ஜாபர், ஆத்தங்கரை ஆஸாத், சித்தார்க்கோட்டை ஹக்கீம் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#தேர்தல்_பணி_குழு
#இராமநாதபுரம்_நாடாளுமன்ற_தொகுதி
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKitWING
#இராமநாதபுரம்_மாவட்டம்
30.03.2024.