விழுப்புரம்.நவ.22., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா அப்பம்பட்டு மற்றும் பள்ளியம்பட்டு கிளைகளை சேர்ந்த முன்னால் தமுமுக நிர்வாகிகள் S.ஷேக் மற்றும் பைரோஸ் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் A.M. இப்ராஹிம் அவர்கள் முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இந்நிகழ்வில் விழப்புரம் மாவட்ட பொருளார் J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R. ஆதம், மாவட்ட துணை செயலாளர் விழப்புரம் செளகத் அலி மற்றும் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #விழுப்புரம்_மாவட்டம் 22.11.17
தமிழகம்
தமிழகம்
ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை! தொகுதி ஆய்வில் நாகை MLA உறுதி!
நாகை. நவ.22., நேற்று (21.11.17) நாகை ஒன்றியம் மஞ்சக்கொல்லை ஊராட்சி பகுதியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புத்தூர் வடமலையான் தோட்டம் குடியிருப்பு பகுதிகளில் வடிகால் இல்லாமல் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிறகு, புத்தூர் ஆட்டோ ஸ்டண்ட் அருகில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் செல்லும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார். மேலும், அங்கு ஒரு குளம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக விவசாய சங்க நிர்வாகி மூர்த்தி அவர்கள் MLA-விடம் கூறினார். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு, இது சம்பந்தமாக அறிக்கை தயார் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடமும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பில் MLA அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், மஜக மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 22.11.17
நாகை வர்த்தக சங்க கூட்டம் தொகுதி பணிகள் குறித்து நாகை MLA கலந்துரையாடல்..!
நாகை.நவ.22., நாகப்பட்டினத்தில் நாகை வர்த்தக மற்றும் தொழில் குழுமம் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந் நிகழ்வில் நாகையை சேர்ந்த வணிகர்கள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துக் கொண்டனர். அதில் இதுவரை ஆற்றிய தொகுதி பணிகள் குறித்தும் இனி செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் MLA அவர்கள் விரிவாக பேசினார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கெல்லாம் பதிலளித்து பாராட்டுகளைப் பெற்றார். கோவைக்கு செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகூர் வரை நீட்டிப்பது குறித்தும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்தும் ரயில்வே திட்டப்பணிகளை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால் அவர்களிடம் கலந்து பேசி வருவதாகவும், விரைவில் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சகத்துடன் பேச விருப்பதாகவும் கூறினார். நாகையின் துறைமுக மேம்பாடு குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களோடு இணைந்து முதல்வரிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார். மேலும் நாகையில் பிறந்த மறைமலையடிகளாருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திடம் பேசி தனி தமிழ் ஆராய்ச்சி கூடத்தை அமைக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் தற்போது இல்லாமல் இருப்பதும் அரசியல் நெருக்கடிகளும்
மஜக கதிராமங்கலம் கிளை நிர்வாகம சீரமைப்பு..!
தஞ்சை.நவ.21., தஞ்சை வடக்கும் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட கதிராமங்கலம் கிளையில் டிசம்பர் 6 குறித்த ஆலோசனை கூட்டமும், செயல்பாடுகளை துரிதப்படுத்த நிர்வாக சீரமைப்பும் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் உஸ்மான் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் அன்சாரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட துணைச்செயலாளர் பரக்கத்துல்லா அவர்கள். திருப்பனந்தாள் முபாரக் அவர்கள் குவைத் மண்டலம் சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கதிராமங்கலம் கிளையின் நிர்வாகம் மறு சீரமைப்பு செய்து, புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் விபரங்கள் வருமாறு.. செயலாளர் : A.சபுரத் அலி பொருளாளர் : Aதெளஃபீக்., துணைச்செயலாளர் : M.யாசர்., துணைச்செயலாளர்.H.பரீத் அஹ்மத்., துணைச்செயலாளர். H.ஆசிக்., ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம் 21_11_2017
நாகை மாவட்ட மீனவர்களை விடுதலை செய்யவேண்டும்! மஜக வலியுறுத்தல்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை) நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மற்றும் நம்பியார் நகர் கிராமங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் அடுத்தடுத்து கைது செய்திருப்பது மீனவ மக்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசிடம் பேசி அவர்களை விடுதலை செய்ய துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும், தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அரசியல் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 18.11.17