திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மஜககொடியேற்று விழா! பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் புதிய கொடிக்கம்பம் நிறுவப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைப்பெற்றது.

பக்கிரிப்பாளையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ரகுமான் கான் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மஜக மாவட்ட செயலாளர் காஜா ஷெரிப் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்களும், இணிப்புகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பாபு ஷானவாஸ், அமிர்கான், அப்பு, செங்கம் நகரச் செயலாளர் பாபுலால், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், தி.மலை அப்துல் ரஹ்மான் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
18.08.2021