நாகை வர்த்தக சங்க கூட்டம் தொகுதி பணிகள் குறித்து நாகை MLA கலந்துரையாடல்..!

image

image

image

நாகை.நவ.22., நாகப்பட்டினத்தில் நாகை வர்த்தக மற்றும் தொழில் குழுமம் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
M.தமிமுன் அன்சாரி MLA
சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

இந் நிகழ்வில் நாகையை சேர்ந்த வணிகர்கள், தொழிலதிபர்கள், பிரமுகர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்துக் கொண்டனர். அதில் இதுவரை ஆற்றிய தொகுதி பணிகள் குறித்தும் இனி செய்யப்போகும் செயல் திட்டங்கள் குறித்தும் MLA அவர்கள் விரிவாக பேசினார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கெல்லாம் பதிலளித்து பாராட்டுகளைப் பெற்றார்.

கோவைக்கு செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகூர் வரை நீட்டிப்பது குறித்தும், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்தும்  ரயில்வே திட்டப்பணிகளை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால் அவர்களிடம் கலந்து பேசி வருவதாகவும், விரைவில் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சகத்துடன் பேச விருப்பதாகவும் கூறினார்.

நாகையின் துறைமுக மேம்பாடு குறித்து அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அவர்களோடு இணைந்து முதல்வரிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

மேலும் நாகையில் பிறந்த மறைமலையடிகளாருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திடம் பேசி தனி தமிழ் ஆராய்ச்சி கூடத்தை அமைக்க அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தற்போது இல்லாமல் இருப்பதும் அரசியல் நெருக்கடிகளும் தமது வேகமான பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும், எனினும் அதையும் தாண்டி பல்வேறு பணிகளை செய்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
21.11.2017.